ஃபேட் டயட் பக்க விளைவுகள்: ஒவ்வொரு நபரும் நீண்ட காலமாம் இளமையாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் ஒரு நபரின் சொந்த பழக்கவழக்கங்கள் அவரை காலத்திற்கு முன்பே முதுமையாக்குகின்றன. இன்றைய பிஸியான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் நமக்கு முதுமையை சீக்கிரம் வரவழைகின்றன. சிலர் உடல் எடையை குறைக்க வினோதமான முயற்சிகளை தொடங்கியுள்ளனர். நம்மில் பெரும்பாலானோரின் இலக்கு உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் இந்த முயற்சியில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது. ஆனால் நீங்கள் சிந்திக்காமல் , மருத்துவரை கலந்தாலோசிக்காமக் டயட்டை பின்பற்றினால், இந்த விரும்பிய பலன் கிடைக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவில் கவனமாக இருங்கள்


தற்போது உடல் எடையை குறைக்கும் டயட் என்ற பெயரில் பல வகையான ஃபாட் டயட்கள் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. இது நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது


ஃபேட் டயட் என்றால் என்ன?


ஃபேட் டயட் என்பது பல்வேறு வகையான டயட் திட்டங்களாகும். இதில் பல விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சில ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட உணவுகளான முட்டைக்கோஸ், புரோபயாடிக்குகள் உள்ள உணவுகள் அல்லது பச்சையான உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவை அதிக கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட் அல்லது அதிக புரத உணவுகளை உள்ளடக்கியிருக்கலாம். அவை தானியங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கான முக்கிய ஆதாரங்களை முற்றிலும் தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. இதில், ஆரோக்கியமான கொழுப்புகளை அதிகம் உட்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் சில ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால்,  சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறையத் தொடங்குகின்றன. இதன் காரணமாக, உங்கள் உடல் பல வகையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.


பேட் உணவின் தீமைகள்


1. சீக்கிரமே முதுமை நெருங்கி விடும்


நீங்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களை மட்டுமே எடுத்துக் கொண்டால், உங்கள் உடலில் பல வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும். இதன் காரணமாக உங்கள் தோலில் முன்கூட்டிய சுருக்கங்கள் தோன்றும். இதன் காரணமாக நீங்கள் காலத்திற்கு முன்பே வயதானவராக தோன்றுவீர்கள். அதனால்தான் உணவு நிபுணரின் ஆலோசனை இல்லாமல் எந்த டயட் திட்டத்தையும் பின்பற்றாதீர்கள்.


மேலும் படிக்க | குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? மருத்துவர்களின் அறிவுரை!


2. சோர்வு மற்றும் பலவீனம்


சோர்வு மற்றும் பலவீனம் முதுமையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது, நீங்கள் பேட் டயட்டை பின்பற்றினால், உடல் பலவீனமடையக்கூடும். இதன் காரணமாக போதுமான தூக்கம் இருந்தாலும் கூட நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | முள்ளங்கி இலை: சிறுநீரக கல் முதல் மூலநோய் வரை, பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://app