மக்களே உஷார்..! ‘இந்த’ வகை உணவுகளால் புற்றுநோய் வரலாம்..!
துரித உணவுகள் சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தாலும் அதில் பல ஆபத்துகள் மறைந்துள்ளன. அவை என்னென்ன…? எந்த வகையான துரித உணவுகளை சாப்பிடக்கூடாது..?
இந்தியாவில் கடந்த சில நாட்களாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒரு சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. மேற்கத்திய வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவு சேர்க்கைகள், இறைச்சி போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது இதற்கு சில முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இவற்றால் நம் உடலில் மலச்சிக்கல், அஜீரண கோளாறு, தேவையற்ற கொழுப்பு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை மட்டுமன்றி பெரிதாக உடலுக்கு உழைப்பு கொடுக்காததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
1.முறையற்ற உணவு பொருட்கள்-குடல் புற்றுநோய்:
குடல்வாய் பிரச்சனைகள் நம் உணவு பழக்கங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. குடல்வாய் என்பது உடலுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய பை போன்ற உறுப்பு ஆகும். இதை பல சமயங்களில் நாம் கண்டு கொள்வதில்லை. இருப்பினும், இது புற்றுநோய் வளர்ச்சியின் ஆரம்பமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். குடல்வாயில் இருக்கும் சிறிய கட்டி முதலில் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில நேரங்களில் இது அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தில் கூர்மையான வலி, குமட்டல், வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு, கடினமான மலம், எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகளை காண்பிக்கும். இந்த வகை புற்றுநோய் பரவியிருந்தால், அது வயிற்றுப் பெருக்கம், வலி, குடலிறக்கம், மூச்சுத் திணறல், பசியின்மை அல்லது குடலில் அடைப்பு ஆகிய பிரச்சனைகளை வெளிக்காட்டும்.
2.புற்றுநோய்களை ஏற்படுத்தும் உணவுகள்:
புற்று நோய் வருவதை, நாம் வாழ்வில் செய்யும் சில மாற்றங்களால் தவிர்க்க முடியும். இது அவர்கள் கடைப்பிடிக்கும் டயட் ஆக இருக்கலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மது போன்ற உணவுகள் புற்றுநோய் பாதிப்புகளை அதிகரிக்க செய்யும். அமெர்க்காவில் 45 சதவிகித புற்றுநோய் பாதிப்புகள் அதிக உடல் எடை மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் ஏற்படுவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில அதிக பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள் புற்றுநோய் வருவதற்கு காரணிகளாக அமைகின்றன. உலக சுகாதார மையம், “புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்” என்ற பிரிவில் பதப்படுத்தப்பட்ட சிகப்பு இறைச்சி உணவு வகைகளை வைத்துள்ளது. அதில், carcinogenic என்ற நிலை இருக்கிறதாம். இது, புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுள் ஒன்று.
மேலும் படிக்க | ஹை யூரிக் ஆசிட் இருக்கா? இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்
3.பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:
உப்பு தடவி, புகையில் சிறிது நேரம் வைத்து எடுக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படும் இறைச்சிகளை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் என்கின்றோம். உதாரணத்திற்கு ஹாட் டாக், பேக்கன், கார்ண்ட் பீஃப் போன்றவற்றை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் பிரிவில் சேர்க்கலாம். இந்த இறைச்சிக்கான உற்பத்தி செயல்முறை பெரும்பாலும் நைட்ரைட்டுகளை உள்ளடக்கியது, இது புற்றுநோயை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரசாயனங்கள் இல்லாமல் இறைச்சியை புகைப்பது கூட பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்களை உருவாக்கலாம். இவை உடலுக்கு கேடு விளைவிக்கும் அம்சங்களுள் ஒன்றாகும்.
4.பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
கவரில் போட்டு பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் என்றாலே அவை பதப்படுத்தப்பட்ட உணவுகளின் வகைகளுள் வந்துவிடும். சிப்ஸ், பிஸ்கட்டுகள், சர்க்கரையுடன் கூடிய உணவுகள், சோடா, சாக்லேட்டுகள் போன்ற பலவகை உணவுகளை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இதை தயாரிக்கும் போதே ஃப்ளேவர்ஸ், கலருக்காக சில அமிலங்கள், சுவைக்கான சில கெமிக்கல், கெட்டுப்போகாமல் இருக்க சில வேலைகள் என பல நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதில் ஃபைபர் சத்துக்களும் இருக்காது, வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களும் இருக்காது. இது உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாவது மட்டுமன்றி புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்க செய்கிறது.
5.இதை செய்தால் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்:
உடலுக்கு நன்மை பயக்கும் சில விஷயங்களை நமது தினசரி நடவடிக்கைகளாக மாற்றிக்கொண்டாலே நம்மால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவராகவோ அல்லது மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டவராக இருக்கிறீர்கள் என்றால் அந்த வகையான பழக்கங்களை நிறுத்தி விடலாம். காய்கறி, பழ டயட் இருந்தால் உடலில் நல்ல கொழுப்புகளும் வைட்டமின் சத்துக்களும் மட்டுமே தங்கும். தினசரி உடற்பயிற்சி செய்தால் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையையும் சரி செய்யலாம். துரித உணவுகளை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் அதை தவிர்த்துவிட்டு ஹெல்தி ஸ்னாக்ஸ் பிரியராக மாறலாம். இப்படி நம் வாழ்வில் செய்யும் சிறு சிறு மாற்றங்களும் நம் உடலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் படிக்க | முகம் நிலா போல் பிரகாசமாக இருக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் உடனடி பலன் தரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ