Weight Loss Tips: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் என இவை அனைத்தும் இதில் அடங்கும். உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வகையான உணவுகளை பின்பற்றுவதை நாம் பார்த்துள்ளோம். செயற்கையான சப்ளிமெண்டுகள் மூலம் நடக்கும் எடை இழப்பு நீண்ட காலம் நீடிக்காது. மேலும் இவற்றால் சில பக்க விளைவுகளும் வரக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Belly Fat Reduction


ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், உங்கள் எடையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பல வித இயற்கையான எளிய வழிகள் உள்ளன. அப்படி ஒரு இயற்கையான வழி பற்றி இந்த பதிவில் காணலாம்.


காய்கறிகள் மற்றும் பழங்கள் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறன. இவை பல வழிகளில் உங்கள் எடையைக் குறைக்க உதவுகின்றன. நாம் அவ்வப்போது பயன்படுத்தும் ஒரு பச்சை காய் இதில் அடங்கும். உடல் கொழுப்பை விரைவாகக் கரைக்க இது உதவுகிறது. 


Bottle Gourd For Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காய்


உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சிறந்த விஷயம் என்னவென்றால், இதில் மிகக் குறைந்த கலோரிகளே உள்ளன. ஒரு கப் (146 கிராம்) சுரைக்காயில் 32 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது எடை இழப்புக்கு சிறந்த வழி. இது பல வழிகளில் உடல் எடையை குறைக்க உதவும்.


எடை இழப்புக்கு சுரைக்காய் நன்மைகள்


குறைந்த கலோரிகளைத் தவிர, சுரைக்காயில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளன. ஒரு கிண்ணம் சுரைக்காயை வேகவைத்து சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கும். இது பசியை கட்டுக்குள் வைத்திருக்கும். இதன் காரணமாக தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இதனால் கலோரி உட்கொள்ளலும் குறைகிறது.


சுரைகாயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது தவிர, இது டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன்மூலம் இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சுரைக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இந்த காரணங்களால் உடல் எடையை குறைக்க இது சிறந்த காய்கறியாக கருதப்படுகிறது. இதை உங்கள் எடை இழப்பு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மிக வேகமாக உடல் எடையை குறைக்கலாம்.


எடை இழப்புக்கு சுரைக்காயை எப்படி பயன்படுத்துவது


உடல் எடையை குறைக்க முயல்பவர்கள் பல வழிகளில் சுரைக்காயை தங்கள் உணவில் சேர்க்கலாம். கறி, கூட்டு, குழம்பு என இப்படி பல வழிகளில் இதை சமைக்கலாம். அதை வேகவைத்து உட்கொள்ள வேண்டும். மிகக் குறைந்த எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி இதை சமைப்பது நல்லது. இதைத் தவிர, பலருக்கு சுரைக்காய் ராய்தாவும் மிகவும் பிடிக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க, சுரைக்காய் சாறு செய்து குடிக்கலாம். இப்படி பல வழிகளில் சுரைகாய் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.


மேலும் படிக்க | காலையில் எழுந்தவுடன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?


மேலும் படிக்க | Liver Health: கல்லீரலை காலி செய்யும்... சில ஆபத்தான உணவுகளும் பழக்கங்களும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ