Weight Loss Tips: ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக இந்நாட்களில் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரித்து உடல் எடை அதிகரிப்பதால் நமது ஆளுமை கெடுவதோடு பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசமான உணவுப் பழக்கம் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை காரணமாக, மக்கள் பெரும்பாலும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தொப்பை கொழுப்பு மற்றும் இடுப்பு பகுதி கொழுப்பு இன்றைய காலத்தில் பலருக்கு பிரச்சனையாகி விட்டது. எடை அதிகரிப்பு இதய நோய்கள், நீரிழிவு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று பல அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 


உடல் எடையை குறைக்க பலர் பல வித வழிகளை பின்பற்றுகிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட வழிகளில் நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் ஒரு பானம் பற்றி இந்த பதிவில் காணலாம். இதை இரவு நேரங்களில் குடிப்பது அதிக நன்மை அளிக்கும்.


எடை இழப்பு பானம் செய்யும் முறை பற்றி இங்கே காணலாம்


தேவையான பொருட்கள்:


- 1/2 அங்குல இஞ்சி
- மஞ்சள் அல்லது 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
-1 தேக்கரண்டி கருஞ்சீரகம்
- ஒரு எலுமிச்சை துண்டு
- ஒரு சிட்டிகை சிறிது அளவு கருப்பு மிளகு தூள்


மேலும் படிக்க | இனிப்பை அதிகமாக சாப்பிடுகிறீர்களா... இந்த 5 உணவுகள் அந்த ஆசையை அடக்கும்!


எடை இழப்பு பானம் செய்யும் முறை:


- தொப்பையை குறைக்க உதவும் இந்த பானத்தை தயாரிப்பது மிகவும் எளிது. 
- இதற்கு இஞ்சி, மஞ்சள் மற்றும் கருஞ்சீரக விதைகளை ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
-  ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, கலவையை போட்டு 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
= அதன் பிறகு அதில் ஒரு துண்டு எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கவும்.


இதை தேநீர் போல சூடாக பருக வேண்டும். இதை தினமும் இரவில் குடித்து வந்தால், இடுப்பு, வயிறு மற்றும் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு விரைவாக கரையும்.


Fat Cutter Drink: இதன் நன்மைகள் என்ன?


- இந்த பானத்தில் பயன்படுத்தப்படும் இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது. 
- இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. 
- இஞ்சி உடல் எடையைக் குறைக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- இதில் சேர்க்கப்படும் மஞ்சளில் குர்குமின் உள்ளது.
- இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
- கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
- இந்த பானத்தில் நாம் சேர்க்கும் கருஞ்சீரகத்தில் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. 
- இது குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
- வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை நச்சுத்தன்மையை நீக்குகிறது.
- மேலும் இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
- இந்த பானத்தில் சேர்க்கப்படும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு குர்குமின் உறிஞ்சுதலை 2000% அதிகரிக்கிறது, 
- இது மஞ்சளின் நன்மைகளையும் அதிகரிக்கிறது.


இந்த பானத்தை தினமும் குடிப்பதன் மூலம், உடல் எடை குறைவதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகமாகும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நோய்கள் எல்லாம் தலைதெறிக்க ஓட... தினம் 2 கிராம்பு போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ