இந்திய மசாலா பொருட்களில் உணவிற்கு தனிப்பட்ட மணத்தையும் சுவையையும் கொடுக்கும் திறன் கிராம்புக்கு தனி இடம் உண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பு, பலவித நோய்களுக்கு மருந்தாக அமைகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கிராம்பு மரத்தின் காய்ந்த பூக்களே கிராம்புகள். இவற்றில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில், அதிகம் அல்ல தினம் இரண்டு கிராம்புகள் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அடையலாம்.
வலி நிவாரணம்
கிராம்புகளில் யூஜெனால் என்ற எண்ணெய் உள்ளது. இது இயற்கை வலி நிவாரணி. எனவே, இதன் உதவியுடன் தலைவலி, பல்வலி மற்றும் தசை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். பல் சொத்தை, பல வலி பிரச்சனைக்கு கிராம்பு தீர்வைத் தரும். இரவு தூங்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிட, பல சொத்தை பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறுவதோடு பல்வலியும் நீங்கும்.
இதய ஆரோக்கியம்
இதய நோய்களுக்கு காரணமாக இருக்கும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த கிராம்பு உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கல்லீரல் ஆரோக்கியம்
கிராம்புகளில் உள்ள கூறுகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன. எனவே, கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் கிராம்பு உதவுகிறது. கிராம்புகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் கல்லீரல் நோய்கள் ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைகிறது .
செரிமான ஆரோக்கியம்
கிராம்புகளில் காணப்படும் எண்ணெய்கள் செரிமான நொதிகளை ஆக்டிவேட் செய்கின்றன. இது உடலின் செரிமான உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. எனவே, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
வாய் துர்நாற்றம் நீங்கும்
வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தை நீக்கும் கிருமி நாசினிகள் கிராம்பில் உண்டு. எனவே, பல்வலி மட்டுமல்லாது ஈறு பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
கிராம்புகளில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. சளி மற்றும் பிற நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு
சர்க்கரை நோயாளிகளுக்கு கிராம்பு நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் சில கூறுகள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதனால் உடல் இன்சுலினை மிகவும் திறம்பட பயன்படுத்தும் நிலை உண்டாகும். இதனால், இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ