நரைமுடியை எளிதாக கருப்பாக்க இந்த மூலிகை எண்ணெய் கைகொடுக்கும்
Premature White Hair: இளமையில் உங்கள் தலைமுடி வெள்ளையாக மாற ஆரம்பித்தால், அதற்கு மூல காரணம் டென்ஷன் தான். ஆனால் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் வெள்ளை முடி என்பது ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அதிலும் 25 முதல் 30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இதனால் பெரும் அதவில் சிரமப்படுகின்றனர், அதற்கான உறுதியான தீர்வு கூட பலமுறை கிடைக்கவில்லை. இளநரை பிரச்சனைக்கு தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு எனப் பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்களால், கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
எனவே இளநரை பிரச்சனையை போக்க மூலிகை எண்ணெய் ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும். மூலிகை எண்ணெய் மூலம் கூந்தலுக்கு ஊட்டம் கிடைப்பதோடு, கூந்தல் அடர்த்தியாகவும் கருப்பாகவும் மாறுகிறது.
மேலும் படிக்க | சருமத்திற்கு பொலிவு தரும் கருப்பு மஞ்சளின் 4 அற்புத நன்மைகள்
வெள்ளை முடியில் கருஞ்சீரக எண்ணெயை தடவவும்
இளநரை ஏற்பட ஆரம்பித்தால் உங்கள் எண்ணெயை மாற்றுவதற்கு அவசியம் வந்துவிட்டதாக புரிந்து கொள்ளுங்கள். அதன்படி கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்துவது முடியை இயற்கையாகவே கருமையாக்க சிறந்ததாக இருக்கும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனையையும் தீர்க்கலாம். வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை சந்தையில் வாங்க வேண்டிய அவசியமில்லை.
கருஞ்சீரகம் ஏன் பயனுள்ளதாக இருக்கும்?
கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளதால், இவை முடி பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இதனால் தான் தலைமுடிக்கு கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அத்துடன் கருஞ்சீரகம் பெரும்பாலும் இயற்கையான வாய் புத்துணர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது உணவின் சுவை நிறைய அதிகரிக்கிறது, ஆனால் கருஞ்சீரகம் எண்ணெய் தயாரிப்பதைப் பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், இது மிகவும் பயனுள்ள ஓர் விஷயமாகும்.
கருஞ்சீரகம் எண்ணெயை வீட்டில் எவ்வாறு தயார் செய்வது
தேவையான பொருட்கள்
ஒரு கப் கருஞ்சீரகம்
தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய்
எண்ணெய் தயாரிப்பது எப்படி?
எண்ணெய் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் கருஞ்சீரகம் விதைகளை சேர்க்கவும். இந்த கலவையை சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு, கடாயை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் காய்ச்சவும். இறுதியாக, எண்ணெயை ஆறவைத்து, ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.
வெள்ளை முடி ஏன் ஏற்படுகிறது
பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR