Fertility Booster: கருப்பு திராட்சையுடன் ஜோடி சேர்ந்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குங்குமப்பூ
Saffron - Black Raisin Combo: திராட்சை மற்றும் குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துவது பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் ஆகும். உடல் பலவீனத்தை நீக்க உதவும் இந்த சத்தான நீர் இது..
புதுடெல்லி: குங்குமப்பூ பல்வேறு ஆரோக்கிய நற்பண்புகளைக் கொண்டுள்ளது. குங்குமப்பூவின் ஆயுர்வேத பண்புகள் பல நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது. குங்குமப்பூவின் பல பண்புகள் ஆயுர்வேதத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. குங்குமப்பூவை உட்கொள்வது பல நன்மைகளை அளிப்பதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கருவுறும் தன்மையை அதிகரிக்கும் குங்குமப்பூ, ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.
குழந்தை பிறப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஆண்களின் விந்து பலப்படவும், குங்குமப்பூ மற்றும் கருப்பு திராட்சை தண்ணீர் உதவுகிறது. இந்த கலவையை எப்படி பயன்படுத்தினால் முழு பயன் கிடைக்கும் என்பதை தெரிந்து பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
திராட்சை மற்றும் குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துவது பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் ஆகும். உடல் பலவீனத்தை நீக்க உதவும் இந்த சத்தான நீர் என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் படிக்க | பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்கும் சுலபமான வழி.
கருப்பு திராட்சையில், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது, இது உடலில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. குங்குமப்பூவில் உள்ள சில ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மனநிலையை ஊக்குவிப்பதோடு, உடலில் உள்ள அழுத்த அளவையும் குறைக்கிறது. இந்த இரண்டின் கலவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குழந்தை பிறப்புக்கும் உதவுகிறது.
குங்குமப்பூ மற்றும் கருப்பு திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பலவீனத்தை நீக்கும்
பெண்களுக்கு ஏற்படும் பலவீனங்களை, குறிப்பாக இரத்தம் இல்லாததால் ஏற்படும் பலவீனம் மற்றும் இரத்த சோகை பிரச்சனைகளைக் களைய குங்குமப்பூ மற்றும் திராட்சை நீர் உதவும். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக தலைச்சுற்றல் வருவதை கேட்டிருக்கலாம். இரத்த சிவப்பணுக்களை ஊக்குவிக்கும் இந்த ஆரோக்கிய நீர், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளையும் போக்கும்.
ஆண்களின் உடல்தகுதியை அதிகரிக்கும்
குங்குமப்பூ மற்றும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட நீர், ஆண்களுக்கு பாலியல் ரீதியிலான நன்மைகளை அதிகரிக்கும். ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை அதிகரிக்க உதவும் இந்த நீரில் அப்படி என்னதான் இருக்கிறது?
நரம்புகளை வலுவாக்கும் இந்த நீரின் பண்பு, உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. எனவே, ஆண்களுக்கு வயகராவாக செயல்படும் அற்புத நீர் இது. கருவுறுதலை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
குங்குமப்பூ மற்றும் கருப்பு திராட்சையை ஒன்றாக ஊறவைத்த நீர், கருவுறுதலை அதிகரிப்பதில் நன்மை பயக்கும். ஆம், இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் இந்த சத்தான நீர், கருவுறுதலை அதிகரிப்பதோடு, பெண்களின் கருப்பையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
குங்குமப்பூ மற்றும் கருப்பு திராட்சை ஊறவைத்த மனதில் மகிழ்ச்சியையும், உல்லாசத்தையும் அதிகரிக்கும். அதற்கு காரணம், இந்த நீரில் உள்ள சத்துகள், உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோனைக் குறைக்கும் பண்பைக் கொண்டிருப்பதால், மனம் அழுத்தமின்றி இருக்க உதவுகிறது.
குங்குமப்பூ மற்றும் கருப்பு திராட்சை தண்ணீர் குடிக்க சரியான வழி
குங்குமப்பூ மற்றும் கருப்பு திராட்சை தண்ணீரை உடலுக்கு பல வழிகளில் பயன்படுத்தலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அபார பலன்களை அளிக்கும்.
கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். அதைத் தவிர, தண்ணீரில் கருப்பு திராட்சையையும், குங்குமப்பூவையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டியும் குடிக்கலாம்.
மேலும் படிக்க | பளபளக்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 உணவுகள் செய்யும் மாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ