மைக்ரைன் என்னும் ஒற்றை தலைவலியை ஓட விரட்ட உதவும்.. உணவுகளும்... பழக்கங்களும்
Natural Remedies For Migraine: மைக்ரேன் தலைவலி என்பது யாரோ ஒருவர் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் கடுமையான தலைவலி.
Natural Remedies For Migraine: மைக்ரேன் தலைவலி என்பது யாரோ ஒருவர் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் கடுமையான தலைவலி. சாதாரண சத்தம் கூட கேட்க முடியாது என்பதோடு, தலைவலியுடன் சேர்த்து குமட்டல் போன்ற உணர்வு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகும். தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒற்றைத் தலைவலி என்னும் மைக்ரேன் உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் வல்லமை கொண்டது.
உலகில் உள்ள சுமார் 100 கோடி மக்கள் மைக்ரேன் பிரச்சனையினால் அவதிப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தலைவலி தீர வலி நிவாரணிகளை உட்கொள்வதன் மூலம் தற்காலிக நிவாரணம் (Health Tips) பெறலாம். ஆனால் பக்க விளைவுகளையும் கருத்தில் கொண்டு, தவறுதலாக கூட மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணிகளை எடுக்கக்கூடாது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்ன, அதிலிருந்து விடுபட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்
தலையில் தாங்க முடியாத வலி, சத்தம் எதையும் கேட்க முடியாத நிலை, பிரகாசம் அல்லது ஒளியை பார்க்க முடியாத நிலை, வாந்தி, குமட்டல், மயக்கம், கண் எரிச்சல் ஆகியவை, ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரைன் தலைவலிக்கான அறிகுறிகள்
தலைவலியை தவிர்க்க உணவில் சேர்க்க வேண்டியவவை:
மெக்னீஷியம் சத்து நிறைந்த உணவுகள்
நரம்புகளை தளர்த்தும் ஆற்றல் கொண்ட மெக்னீசியம் ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த உணவாக இருக்கும். கீரை வகைகள், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதை வகைகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் சால்மன் மீன் போன்ற ஒமேகா 3 என்னும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்ற உணவுகளில் மெக்னீசியம் ஏராளமாக உள்ளன.
முளை கட்டிய தானிய உணவுகள்
ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட, முளை கட்டிய தானிய உணவுகளை அதிகம் சாப்பிடுவது பலன் அளிக்கும். மேலும் இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் நார்சத்து. முளை கட்டுவதால், ஊட்டசத்து மதிப்பு இரட்டிப்பாகிறது. எனினும், முளை கட்டிய தானிய உணவுகளை பச்சையாக சாப்பிடுவதை விட, சிறிது வேக வைத்து சப்பிடுவது நல்லது.
பச்சை காய்கறிகள்
கீரை, வெந்தயக் கீரை, பீன்ஸ், சுரைக்காய் போன்ற பச்சை காய்கறிகள் ஒற்றைத் தலைவலியை தடுக்க உதவும்.
மூலிகை டீ
இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த பிளாக் டீ, தலைவலியை எதிர்த்துப் போராடுவதற்கும், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கவும் மிகவும் சிறந்த மூலிகை டீ. கெமோமில் டீயும் ஒற்றைத் தலைவலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
தேங்காய் மற்றும் கிராம்பு எண்ணெய்
தேங்காய் எண்ணெய் 10 மில்லிகிராம் எடுத்துக் கொண்டு, அதில் 2 கிராம் கிராம்பு எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதனை தலையில் தடவினால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
தலைவலி வராமல் தடுப்பதற்கான வழிகள்
செரிமான பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுதல்
தலைவலிக்கும் குடல் ஆரோக்கியத்திற்க்கும் இடையே நெருங்கி தொடர்பு உண்டு. அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், இரைப்பை குடல் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொண்டால் ஒற்றை தலைவலியில் இருந்து தப்பிக்கலாம்.
அனுலோம்-விலோம் பிராணாயாமம்
ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைப் போக்க அனுலோம்-விலோம் பிராணாயாமம் மிகவும் பயனுள்ள யோகாசனம். இந்த பயிற்சியை தினமும் மேற்கொள்வதை பழக்கமாக்கிக் கொண்டால். தலைவலி மட்டுமின்றி மன அழுத்தமும் நீங்கும். இந்த ஆசனத்தை தினமும் சுமார் 15 நிமிடங்கள் செய்து வந்தால், பல நன்மைகளைப் பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் : ஆரம்ப அறிகுறி இந்த இடத்தில் தோன்றும்.. உஷார் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ