ஜாதிக்காய் மருத்துவ குணங்கள் பல நிறைந்த அற்புத மசாலா. பிரியாணியில் ஜாதிக்காய் சேர்த்தால் ஊரே மணக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு போன்ற கனிமங்கள் நிறைந்த ஜாதிக்காய் நரம்புகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை அளிப்பதோடு, பாலியல் பிரச்சனைகளையும் தீர்க்கிறது. நினைவாற்றலை பெருக்குதல், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்ற எண்ணற்ற பலன்களை கொண்டது ஜாதிக்காய்.
பாலியல் பிரச்சனை
ஜாதிக்காய் இயற்கை வயாகரா என்று அழைக்கப்படுகிறது. ஆண்களின் விந்து எண்ணிக்கையின் தரம் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிக்கும் பண்பு இதில் உள்ளது. மேலும், பாலுணர்வை தூண்டி, ஆண்மை தன்மையை அதிகரித்து பாலியல் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு (Sexual Health) தீர்வைத் தரும் ஆற்றல் இதில் உண்டு.
மூளை ஆற்றல்
ஜாதிக்காய் நரம்பியல் ஆரோக்கியத்துடன் மூளைத் திறனை மேம்படுத்தவும் உதவும். ஜாதிக்காயில் மிரிஸ்டிசின் மற்றும் மைசலின் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் காணப்படுகின்றன, அவை நினைவாற்றலை மேம்படுத்த உதவும். இதனை அளவோடு உட்கொள்வதன் மூலம் மறதி நோய் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மன அழுத்தம்
மன அழுத்தத்தை நீக்கி நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி நரம்புகளை ரிலாக்ஸ் செய்ய உதவும் ஜாதிக்காய் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஹாப்பி ஹார்மோனை தூண்ட உதவும் இதனால் தூக்கமின்மைக்கும் தீர்வு கிடைக்கும். முதுமை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஜாதிக்காய் முதுமையை விரட்டி இளமையை தக்க வைக்கவும் உதவும்.
உடல் பருமன்
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் ஜாதிக்காயை சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் உள்ளது. உடல் பருமன் குறைய குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஜூரண சக்தியை வலுப்படுத்தி. வாயு தொல்லை மலச்சிக்கல் போன்ற குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பதால், உடல் பருமன் குறைய உதவும்.
நீரிழிவு
நமது கணையத்தில் இன்சுலின் உற்பத்தி குறையும் போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்கி நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஜாதிக்காய் கணையத்தின் செல்களை ஆக்டிவேட் செய்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சுகர் லெவலை கட்டுப்படுத்துகிறது. எனவே, ஜாதிக்காயை தொடர்ந்து உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் : ஆரம்ப அறிகுறி இந்த இடத்தில் தோன்றும்.. உஷார் மக்களே!
இரத்த ஓட்டம்
உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். ஜாதிக்காயில் உள்ள இரும்புச்சத்து, மாங்கனிசு, பொட்டாசியம் ஆகியவை, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. இதன் மூலம் உடலில் எனர்ஜி லெவல் குறையாமல் இருக்கும்.
டீடாக்ஸ்
சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சேரும் நச்சுக்களையும், அழுக்குகளையும் நீக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் ஜாதிக்காயில் நிறைந்துள்ளன.
குறிப்பு: மருத்துவ குணங்கள் நிறைந்த ஜாதிக்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதும் ஆபத்து. இதனால் உங்கள் உடல் நிலைக்கு எந்த அளவு ஜாதிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து சாப்பிடுவதே நல்லது. இல்லை என்றால், பக்கவிளைவாக வாந்தி குமட்டல், நெஞ்செரிச்சல், மயக்கம் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் எலுமிச்சை... பயன்படுத்தும் முறை இது தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ