உணவு உண்ண அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் பார்த்தாலே வாயில் எச்சில் ஊற வைக்கும் என்றால், பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வார இறுதியில், ருசியான மணமான, மனதை மயக்கும் சத்தான உணவை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம். முட்டையை வைத்து பறவையின் கூடு போன்ற ஒரு உணவை தயாரிக்கலாம்.


முட்டை பறவையின் கூடு செய்முறை:  
Egg Bird’s Nest என்பது உலகளவில் பிரபலமான ஒரு உணவு வகை. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் Egg Bird’s Nest, சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும். 


Also Read | Lunar New Year 2021: இந்த ஆண்டின் முக்கியத்துவமும் கொண்டாட்டங்களும்


தேவையான பொருட்கள்: முட்டை, உருளைக் கிழங்கு, பச்சை பட்டாணி, கரம் மசாலாப் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சமையல் எண்ணெய்.


முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, மசித்து வைக்கவும். அதில் உப்பு, காரம் கொஞ்சம் கரம் மசாலா சேர்த்து மைய பிசைந்துக் கொள்ளவும்.


பச்சை பட்டாணியை உப்பு மற்றும் சிறிது மிளகாய்த்தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். 
முட்டையை இரண்டாக வெட்டி, அதன் உட்பகுதியில் பச்சைப் பட்டாணியை வைக்கவும். பின்னர் பிசைந்த உருளைக்கிழங்கை முட்டையைப் போல உருட்டிய பிறகு கையால் குழி செய்து அதற்குள் முட்டையை வைக்கவும். 


ஒரு தட்டில் வறுத்த வெர்மிசெலியை பரப்பி வைத்து, அதன் மீது உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து வைத்திருக்கும் முட்டையை வைத்து உருட்டவும். இப்போது முட்டையை பார்ப்பதற்கு பறவைக்கூடு போன்றே இருக்கும். பார்ப்பவர்களை சாப்பிடத் தூண்டும் Egg Bird’s Nest தயார். தக்காளி கெட்ச்அப் உடன் முட்டை பறவை கூட்டை பரிமாறவும்.


ALSO READ | பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR