Health News: குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து
வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை ஏற்பட்டால் குடல் புழுக்கள் ஏற்பட்டிருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்
நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று தெரியுமா? வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை ஏற்பட்டால் குடல் புழுக்கள் அதிகரித்திருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
குடலில் புழுக்கள் தங்கி்இருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும்.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறு குடற்புழுக்களை நீக்க மருந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான், ரத்த சோகை, சத்துக் குறைபாடு, செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர்படும்.
இதற்கு வீட்டு வைத்தியமாக பல உணவுகள் இருந்தாலும், சிலவற்றை மட்டும் தெரிந்துக் கொள்வோம்.
Also Read | சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்
சுண்டைக்காய்ப் பொரியல்: பச்சை சுண்டைக்காயை நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நசுக்கி வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் , மிளகுத் தூள், கல் உப்புப் போட்டு பொரியல் ஆக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்.
பாகற்காயும் குடல் புழுக்களை வெளியேற்ற சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும்..நாட்டு பாகற்காயை மசியலாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.
அகத்திக் கீரையை சாறு எடுத்து சாப்பிடுவதும் குடலில் தங்கி இருக்கும் புழுக்களை வெளியேற்றும். அகத்திக்கீரையை சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதே அளவு பூண்டு சாறு மற்றும் தூய தேன் எடுத்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் மட்டும் குடித்து வந்தால் குடல் புழுக்கள் நீங்கும்.
Read Also | துவாதசியன்று அகத்திக்கீரை நெல்லிக்காய் சாப்பிடுவதன் காரணம் தெரியுமா?
வேப்பிலை உருண்டைகள் செய்து சாப்பிட்டாலும் குடல் புழுக்கள் உடலிலிருந்து வெளியேறிவிடும். வேப்பங் கொழுந்து, கறிவேப்பிலை, பூண்டு, மிளகு, ஓமம், சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து பசு நெய்யில் பொன் நிறமாக வறுத்து இறக்கி ஆற வைத்து கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு இந்த கலவையை அரைத்து துவையலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இதை சாப்பிட்டு பிறகு தண்ணீர் குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும்.
குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து வடி கட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.
Also Read | மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள் என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR