Health News: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்

சிறியவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோய் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் அற்புதமான தேநீர்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2021, 06:51 PM IST
  • நீரிழிவுக்கு உகந்தது வேம்பு தேநீர்
  • வேப்பிலையின் பயன்களையும் பெறலாம்
  • வேம்பு தேநீரை தயாரிப்பதும் எளிது
Health News: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர் title=

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது வெறும் முதுமொழியோ, பழமொழியோ இல்லை. இது நிதர்சனமான உண்மை. சிறியவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோய் நீரிழிவு நோய்.

சர்க்கரை நோயினால் பலரும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.பல்வேறு விதமான மருந்துகளை உபயோகித்தாலும் நீரிழிவு நோய் முற்றிலுமாக ஒழிந்து போவதில்லை.

வரும் முன் காப்பது நன்று என்பதால், சர்க்கரை நோயை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக நீரிழிவு நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒரு வழி வேம்பு தேநீர். தயாரிப்பதும் சுலபம். தேவையான பொருட்களும் வீட்டில் இருப்பவையே…

ALSO READ | துவாதசியன்று அகத்திக்கீரை நெல்லிக்காய் சாப்பிடுவதன் காரணம் தெரியுமா?

வேம்பு தேநீர் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
வேப்பிலையை காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

வேப்பிலை தூள்-1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி
டீ தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை: முதலில் வேப்பிலையை தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் லவங்கப்பட்டை தூளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

அதேபோல், தண்ணீரில் தேயிலையை சேர்த்துக் கொதிக்க வைத்து வடித்துக் கொள்ளவும். இந்த இரண்டு பானங்களையும் ஒன்றாக கலந்து குடித்து வரவும். இந்த தேநீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயில்லாதவர்கள் இந்த தேநீரை குடித்து வந்தால், அவர்களை நெருங்க நீரிழிவும் தயங்கும்.  

ALSO READ | ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் பால் செய்யும் அற்புதங்கள்,,,

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News