இன்றைய வாழ்க்கை முறை காரணமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இப்போதேல்லாம், முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து விட்டன. உடலில் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைந்து LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கும் போது மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் மெழுகு போன்ற ஒரு பொருளான கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.  கெட்ட கொலஸ்ட்ரால் இதய நரம்புகளில் படிந்து, இரத்த ஓட்டத்தை பாதிப்பதன் காரணமாக இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. இந்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, மருந்துகளின் உதவியை நாடலாம். இது தவிர, தினசரி சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்


கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க  கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள்


ஆரோக்கியமான உணவு பழக்கம்


அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கிய ஆரோக்கியமான உணவு பழக்கம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். உணவில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக்க பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். பல வகையான காய்கறிகள், பல வகையான பழங்கள் என உங்கள் டயட்டில் தினமும் இரண்டு வகை காய்கறி மற்றும் இரு வகை பழங்கள் இருக்க வேண்டும்.


பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்


உணவில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளின் அளவைக் குறைப்பதால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளான பேஸ்ட்ரிகள், குக்கீஸ், கேக்குகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ரெடி டு ஈட் வகை உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மேலும் துரித உணவுகளும் இதய நோய் ஆபத்தை அதிகரிக்க கூடியவை. இவற்றில் உள்ள அதிக அளவிலான சோடியம் இதய நோய்கள் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, இதை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஓமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த பாதாம், வதுமை பருப்பு, மீன் உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


மேலும் படிக்க | மூளை வளர்ச்சியை பாதிக்கும் விட்டமின் B12 குறைபாடு... தவிர்க்க உதவும் சில பழங்கள்


தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளவும்


தினமும் உடற்பயிற்சி செய்வதால், உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும்ன், உடல் பருமனை குறைப்பதும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எனவே, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கலோரிகளை எரிக்கவும், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை நீங்கும்.


வெந்நீர் குடிக்கும் பழக்கம்


கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், வெந்நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள கொழுப்பை கரப்பதோடு, நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. வெந்நீர் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனினும், அதிக சூடு நல்லதல்ல. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல்


புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். உணவு பழக்கம் மட்டுமல்லாது, இது போன்ற கெட்ட பழக்கங்களும் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கைவிடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் முதல் உடல் பருமன் வரை... முளை கட்டிய தானியங்களை மிஸ் பண்ணாதீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ