உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கும் உணவுகள்! மறந்தும் சாப்பிடாதீங்க!
துரித உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது, மேலும் இது உடல் பருமன், கார்டியோவாஸ்குலார் நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தினை உண்டு பண்ணுகிறது.
உடலுக்கு கொழுப்பு தேவையான ஒன்று தான், ஆனால் அதில் இரண்டு வகையுள்ளது. அதில் எதை நாம் எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து நாம் பெறக்கூடிய பலன் உள்ளது. ஹெச்டிஎல் மற்றும் எல்டிஎல் ஆகிய இரண்டு வகை கொலஸ்ட்ரால் உள்ளது, இதில் ஹெச்டிஎல் உடலுக்கு ஆரோக்கியத்தையும், எல்டிஎல் உடலுக்கு தீங்கையும் விளைவிக்கிறது. இப்போது எந்தெந்த உணவுகள் நமது கெட்ட கொழுப்புகளை அதிகரித்து தீங்கை விளைவிக்கும் என்பது குறித்து இங்கே காணலாம். நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அதிகளவு கெட்ட கொழுப்புகள் நிறைந்துள்ளது. உதாரணமாக சாசேஜஸ், ஹாட் டாக்ஸ், பேக்கன், ஃப்ரோசன் கெபாப் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. சுவை நிறைந்த ஜங்க் ஃபுட்ஸ் அதிகளவு ஆபத்தை தருகிறது. சிப்ஸ், நாச்சோஸ், மில்க் சாக்லேட்டுகள், சோடாக்கள் மற்றும் செயற்கை சுவையூட்டப்பட்ட பானங்கள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த காய்கறிகள் பக்கம் போகாதீங்க
எண்ணெய்களில் பொறித்த, வறுத்த உணவுகளில் அதிகளவு கெட்ட கொழுப்புகள் நிரம்பியிருக்கும், இது உடல் பருமனையும் அதிகரிக்கிறது. இந்த வகை உணவுகள் எந்த வயதினருக்கும் ஏற்றதாக இருக்காது. ஐஸ்க்ரீம், கேக்குகள், டோனட்ஸ் மற்றும் பாஸ்ட்ரீஸ் போன்ற இனிப்பு வகை உணவுகள் உங்கள் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடியது. துரித உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது, மேலும் இது உடல் பருமன், கார்டியோவாஸ்குலார் நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தினை உண்டுபண்ணுகிறது. அடுத்ததாக பன்றிக்கறியில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது, இது உடலில் எல்டிஎல் கெட்ட கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
அதேபோல ஆட்டிறைச்சியை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளாமல், குறைவான அளவில் சேர்த்துக்கொள்வது நல்லது, ஏனெனில் இது கொழுப்பு அதிகம். கோழி போன்ற பரப்பன உணவுகள் உடலுக்கு நல்லது தான், ஆனால் தோல் நீக்கப்பட்ட இறைச்சியை தான் நீங்கள் உண்ண வேண்டும். சம்மந்தப்பட்ட பொருட்கள் உடலுக்கு நல்லது தான், ஆனால் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. பால், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.
மேலும் படிக்க | முகப்பரு இருக்கா? அப்போ இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ