Summer Tips: கடும் கோடையிலும் உடலை கூலாக வைத்திருக்க... சில சூப்பர் உணவுகள்!
Summer Tips: கடுமையான வெப்பம் நமது உடலின் செயல்பாடுகளை பாதிக்கிறது. உஷ்ணத்தைத் தணிக்கும் அதே வேளையில், உடலைக் குளிர்விக்கும் போது ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதும் மிக முக்கியமானது.
தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விடஅதிகரித்து, வெப்ப நிலை 40-45 டிகிரி வரை சென்று விட்டதாலும், கடுமையான வெப்ப அலைகள் வீசுவதாலும், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், ஆரோக்கியத்தின் மீதான தாக்கம் பல மடங்கு அதிகரிக்கிறது. இந்நிலையில், கோடை காலத்தில், உடலி நீர்சத்து குறையாமல், உங்களை வெப்பத்திலிருந்து காக்கும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கடுமையான வெப்பம் நமது உடலின் செயல்பாடுகளை பாதிக்கிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் மற்றும் அனைத்து முக்கியமான உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது. கடுமையான வெப்பம் நீரிழப்பு, தோல் எரிச்சல் மட்டுமல்லாது, தீவிர சூழ்நிலைகளில் வெப்ப தாக்கங்களை ஏற்படுத்தும். கோடை வெப்பத்தை சமாளிக்க, உடல் வெப்பநிலையை குளிர்விக்க வியர்வை ஏற்படுகிறது. எனினும், வியர்வை வடிவில் வெளிய்யேறும் நீர் மூலம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்கள் குறைந்து விடும்.
உஷ்ணத்தைத் தணிக்கும் அதே வேளையில், உடலைக் குளிர்விக்கும் போது ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதும் மிக முக்கியமானது. பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் சில மூலிகைள், உடலுக்கு நீர் சத்தை கொடுப்பதோடு, உடலை குளிவிக்க உதவுகிறது.
வெப்ப அலையை எதிர்த்துப் போராட உதவும் குளிர்ச்சியான உணவுகள்
1. தர்பூசணி: நிர்சத்து மிக்க தர்பூசணி உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் பழம். இந்தியா முழுவதும் கிடைக்கும் கோடைகால உணவாகும். தர்பூசணியில் 92% நீர் உள்ளது. இது ஒரு சிறந்த நீரேற்ற உணவாக அமைகிறது. இதில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. துளசி இலைகள் மற்றும் எலுமிச்சையுடன் கலந்த தர்பூசணி ஜூஸ் இணையான கோடை கால பானம் வேறெதுவும் இருக்க முடியாது.
மேலும் படிக்க | வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!
2. பீட்ரூட் மற்றும் கேரட்: வெப்ப அலையிலிருந்து பாதுக்காக்கும் உன்னதமான சேர்க்கையான, பீட்ரூட் மற்றும் கேரட் உங்கள் உடலில் இருந்து வெப்பத்தை நீக்குகிறது . அதோடு, உங்கள் செரிமானத்தை கட்டுக்குள் வைத்திருக்க உடல் வெப்பநிலையை சீராக்குகிறது. நீங்கள் அவற்றை துண்டுகளாக்கி சாப்பிடலாம் அல்லது ஆப்பிள் மற்றும் நெல்லிக்காய்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சுவையான ஜூஸ் செய்யலாம்.
3. வெள்ளரிக்காய்: வெள்ளரிகள் கோடை காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த உணவு. புத்துணர்ச்சியூட்டக்கூடியவை மற்றும் கலோரிகளில் மிகக் குறைவு. அவை சுமார் 95% தண்ணீரைக் கொண்டிருக்கின்றன, அவை கோடையில் நீரேற்றமாக இருக்க சிறந்தவை. வெள்ளரியில் வைட்டமின் கே மற்றும் சி ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
4. புதினா: இந்த மூலிகை உணவுகளுக்கு புதிய சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் பல குளிர்ச்சியான பண்புகளையும் கொண்டுள்ளது. புதினா இலைகளை தொடர்ந்து உட்கொண்டால், அஜீரணத்தை போக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் உதவும். நீங்கள் புதிய புதினா இலைகளை சாலடுகள், ஜூஸ் ஆகியவற்றில் சேர்க்கலாம் அல்லது அவற்றை தண்ணீரில் ஊறவைத்து, அதனை அடிக்கடி அருந்தலாம்.
5. இளநீர்: இயற்கையின் ஆற்றல் பானமான இளநீரில், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன, அவை கோடை கால அற்புத பானம். இதனை தினமும் அருந்துவது அவசியம். கோடையில் வியர்வையால் இழந்த திரவங்கள் மற்றும் தாதுக்களை மீண்டும் பெற இது எளிதான வழியாகும்.
6. சாலட்டுகள்: தக்காளி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் காலே, கீரை போன்ற இலைக் காய்கறிகள் நிறைந்த தினசரி சாலட்களை நீங்கள் சாப்பிடலாம். இந்த காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உங்கள் சாலட்டை ஒரு முழுமையான உணவாக மாற்ற, அதில் கொண்டைக்கடலை, பயறு போன்ற புரத சத்து நிறைந்த உணவை சேர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஆண்களே 40 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்கணுமா? இதை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ