ஆரோக்கியாக நூறாண்டுகள் வாழ... தேவையான வைட்டமின்கள் இவை தான்
Essential Vitamins for Healthy Long Life: ஆரோக்கியமாக நூறாண்டுகள் வாழ வேண்டும் என்றால் எந்த எந்த விட்டமின்கள் தேவை, அவை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Essential Vitamins for Healthy Long Life: நீண்ட ஆயுளுக்கு சமச்சீரான உணவு மிக அவசியம். ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சில வைட்டமின்கள் மிகவும் முக்கியம். வைட்டமின் சத்துக்களைப் பெற, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், உணவு மூலம் எடுத்துக் கொள்வதே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு தேவையான ஐந்து விட்டமின்கள், அதன் முக்கியத்துவம், உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின் டி (Vitamin D)
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிப்பதோடு மட்டுமின்றி, எலும்புகள் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. மன ஆரோக்கியத்திற்கும் இந்த வைட்டமின் மிகவும் தேவை. மேலும் வைட்டமின் டி குறைபாட்டால், புற்றுநோய், எலும்பு பலவீனம், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சூரிய ஒளி, ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த மீன்கள், வைட்டமின் டி சப்ளிமெண்ட் மாத்திரைகள் ஆகியவை மூலம் வைட்டமின் டி யை அதிகம் பெறலாம்.
வைட்டமின் சி (Vitamin C)
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ ரேடிக்கல்களால் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு, காயங்கள் ஆறவும், இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ளவும் வைட்டமின் சி அவசியம். வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால், இதய நோய்கள், பல வகையான புற்று நோய்கள், மறதி நோய்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம் என்கின்றன ஆராய்ச்சிகள். ஆரஞ்சு எலுமிச்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள், ப்ரோக்கலி, குடைமிளகாய், கிவி, பெர்ரி பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
வைட்டமின் ஈ (Vitamin C)
ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் ஈ உணவுகள், செல்கள் வீக்கம் அடைவதில் இருந்தும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ முதுமையையும் தடுக்கிறது. ஆரோக்கியமான சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் வைட்டமின் ஈ, அல்சைமர் நோயை தடுக்கவும், முதுமை காரணமாக ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. நட்ஸ், விதைகள், கீரை, முழு தானியங்கள் ஆகியவை வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகள் ஆகும்.
மேலும் படிக்க | உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!
வைட்டமின் பி12 (Vitamin B12)
சிவப்பு ரத்த அணுக்கள் உருவாகும், டிஎன்ஏ சென்டர்சிஸ், நியூரான் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 மிக அவசியம். வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உண்பதால், ரத்த சோகை, இதய நோய்கள், முதுமையினால் ஏற்படும் மூளை பாதிப்புகள் போன்றவை தடுக்கப்படுகின்றன. இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள் ஆகியவை வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் ஆகும். வயதானவர்கள், சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை தவிர்க்க, இதற்கான சப்ளிமெண்ட் மாத்திரைகளை மருத்துவர் அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் கே2 (Vitamin K2)
வைட்டமின் கே2, ஆரோக்கியமான ரத்த உறைதலுக்கு அவசியம். எலும்பு ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் கே2, தமனிகள் மற்றும் திசுக்களில் கால்சியம் உருவாகாமல், அவற்றை எலும்புகள் மற்றும் பற்களை சென்றடைய உதவுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் நோயும் வராமல் பாதுகாக்கப்படும். முட்டையின் மஞ்சள் கரு, பாலாடை கட்டி, புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், புல் பொருட்கள் உண்ணும் விலங்குகளின் இறைச்சிகள் ஆகியவை வைட்டமின் கே2 நிறைந்த உணவுகள் ஆகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆண்கள் யோகாசனம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ