உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!

Health Benefits Of Vegetable Juices: கோடை காலத்தில் உடலுக்கு பல பழ ஜூஸ்கள் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல், சில காய்கறிகளையும் ஜூஸ் போட்டுக் குடிக்கும்பட்சத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம் 

  • Feb 29, 2024, 06:20 AM IST

Vegetable Juices: பழுத்த பழங்களை ஜூஸ் போடுவது போன்று நல்ல நிலையில் உள்ள காய்கறிகளை ஜூஸாக குடிக்கலாம். சுவைக்கு உப்பு போடலாம் என்றாலும் பச்சையாக குடிப்பது இன்னும் நன்மை பயக்கும். மேலும், இதனை கோடை காலத்தில் மட்டுமின்றி எந்த பருவத்திலும் பருகலாம்.

 

 

 

 

 

1 /7

கேரட் ஜூஸ்: இதை குடிப்பதால் சருமம் பளபளக்கும். அதுமட்டுமின்றி கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. 

2 /7

தக்காளி ஜூஸ்: இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மேலும், இதயத்திற்கும் நல்லது. 

3 /7

பீட்ரூட் ஜூஸ்: இதில் வைட்டமிண் சி மற்றும் கே அதிக உள்ளது. எனவே, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

4 /7

கீரை ஜூஸ்: இதில் வைட்டமிண் ஏ, சி, கே ஆகியவை அதிகமாக உள்ளது. 

5 /7

முட்டைகோஸ் ஜூஸ்: இதிலும் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக செரிமானத்திற்கு நல்லது. 

6 /7

வெள்ளரிக்காய் ஜூஸ்: இது கோடைகாலத்திற்கு ஏற்றது. உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறி ஜூஸ்கள் குறித்த செய்தியை வாசித்தமைக்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பொதுவான தகவல்களையே வழங்குகிறது. வீட்டு வைத்தியம், பொது தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக உங்கள மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.