வாழை மரத்தில் இருந்து கிடைக்கு அனைத்துமே, உடல் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கக் கூடியது. வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத் தண்டு என அனைத்தும் ஊட்டசத்துக்களின் களஞ்சியம். வாழைமரத்தின் நடுத்தண்டு பகுதியான வாழைத்தண்டு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த அற்புத காய்கறி.  வாழைத்தண்டின் சுவை மெல்லிய இனிப்பும், லேசான கசப்பும் நல்ல துவர்ப்பும் சேர்ந்ததாக இருக்கும். வாழைத்தண்டில் கலோரிகள் மிக மிகக் குறைவு. ஆனால் வைட்டமின்களும் மினரல்களும் அதிகம். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழைத் தண்டில் உள்ள சத்துக்கள் ( Nutrients in Banana Stem)


ஊட்டசத்துக்களின் களஞ்சியமான வாழைத் தண்டில், வைட்டமின் பி6, வைட்டமின் சி,மக்னீசியம், தாமிரசத்து, பொட்டாசியம்,இரும்புச்சத்து, நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள், ஆகியவை நிறைந்திருக்கின்றன.


உடலை டீடாக்ஸ் செய்யும் ஆற்றல் கொண்ட வாழைத் தண்டு (Banana Stem To Detox Your Body)


உடலில் நச்சுக்கள் சேரும் போது தான், ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. உடலில் கழிவுகள் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வதால், பல நோய்களை தவிர்க்கலாம். இதற்கு வாழைத்தண்டு பெரிதும் கை கொடுக்கும். வாழைத்தண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அதோடு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி போன்ற பல செரிமான பிரச்சனைகள் தீரும். வாழைத்தண்டு ஜூஸை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், பெரும் பலன் பெறலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


மேலும் படிக்க | டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்


சிறுநீரக கற்களை உடைக்கும் ஆற்றல் கொண்ட வாழைத்தண்டு (Banana Stem To Get Rid of Kidney Stones)


சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு அருமருந்து. மருத்துவர், வாழைத் தண்டு ஜூஸ் அருந்துமாறு பரிந்துரை செய்கிறார்கள். டையூரிக் பண்புகள் கொண்ட வாழைத்தண்டு, சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குழாய் தொற்று இருப்பவர்கள் கூட வாழைத்தண்டு சாற்றை அருந்தலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் வாழைத்தண்டு (Banana Stem To Control High Blodd Pressure)


உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்கி கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு, பக்கவாதம் மாரடைப்பு போன்ற ஆபத்துக்கள் தடுக்கப்படும். மேலும், கொழுப்பு கொலஸ்டிராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது என்பதாலும், இதனை வழக்கமாக சாப்பிட்டு வந்தால், இதய நோய்களுக்கு குட்பை சொல்லலாம்.


இரத்த சோகையை போக்கும் வாழைத்தண்டு (Banana Stem Inceases Hemoglobin)


வாழைத்தண்டில் விட்டமின் பி6 மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை இரண்டுமே இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. வைட்டமின் பி6 குறைபாட்டால் மனச்சோர்வு, பார்க்கின்சன் நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இதனை தடுக்கவும் வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ