டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்

Dengue Recovery Tips: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2024, 01:04 PM IST
  • டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைப்பாட்டை சரி செய்வதற்கான முதன்மையான பழமாக பப்பாளி பார்க்கப்படுகின்றது.
  • இதில் உள்ள பப்பைன் என்ற என்சைம் டெங்குடன் போராடுவதற்கு உதவுகின்றது.
  • இது பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள் title=

Dengue Recovery Tips: இந்தியாவில் பல மாநிலங்களில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழையை பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த காலத்தில் தான் அதிக நோய்களும் தொற்றுகளும் பரவுகின்றன. அதில் முக்கியமானது டெங்கு காய்ச்சல். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. 

இந்த ஆண்டும் நாட்டின் பல மாநிலங்களில் டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். நாளுக்கு நாள் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணம் என்ன? இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதிலிருந்து விரைவாக குணமடைவதற்கான இயற்கையான வழிகள் என்ன? டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன? மக்களுக்கு இவற்றைப் பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். 

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம். டெங்கு பாதிப்பால் ஏற்படும் பிளேட்லெட் எண்ணிக்கை (Platelet Count) குறைவை சரி செய்ய உதவும் இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பப்பாளி 

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைப்பாட்டை சரி செய்வதற்கான முதன்மையான பழமாக பப்பாளி (Papaya) பார்க்கப்படுகின்றது. இதில் உள்ள பப்பைன் என்ற என்சைம் டெங்குடன் போராடுவதற்கு உதவுகின்றது. இது பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்கின்றது. டெங்கு காய்ச்சலில் பப்பாளி இலை சாறு அறுந்த அறிவுறுத்தப்படுகிது.

மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!

கிவி 

கிவி (Kiwi) பழத்தில் காப்பர், பொட்டாசியம், வைட்டமின் இ, வைட்டமின் ஏ ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான இரத்த சிவப்பு அணுக்களின் உருவாக்கத்திலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிப்பதிலும் உதவுகின்றன.

மாதுளை 

மாதுளையில் (Pomegranate) ஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இவை உதவுகின்றன. இது தவிர மாதுளம்பழம் இரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்கவும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

சாத்துக்குடி

சாத்துக்குடி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. இது உடலை நீரேற்றுத்துடன் வைத்திருக்க உதவுகிறது. பிளேட்லெட் உருவாக்கத்தை அதிகரிப்பதிலும் இது உதவியாக இருக்கின்றது.

இளநீர்

இளநீர் (Coconut Water) உடலுக்கு தேவையான மினரல்கள் மற்றும் எலக்ட்ரோலைட்களை வழங்குகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் இளநீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கும். ஏனென்றால் இதில் போதுமான அளவு மினரல்களும் உப்பும் உள்ளது. இது உடலை நீரேற்று ஆக வைத்திருக்க உதவுகின்றது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு இயற்கையான வழிகளில் ப்ளேட்லெட்டுகளை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். எனினும் இவை டெங்கு காய்ச்சலுக்கான தீர்வாகாது. எந்தவித உணவு அல்லது பானத்தை உட்கொள்ளும் முன்னரும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எடை குறைக்க மாதவன் தினமும் செய்த விஷயம்! ரொம்ப எளிமையா இருக்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News