வெல்லம் ஆரோக்கிய நன்மைகள்: வெல்லம் எப்போதுமே சர்க்கரைக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் வெறும் கலோரி மட்டுமே உள்ளது. ஆனால் வெல்லம் என்பது சத்து மிக்க பொருளாகும். ஆயுர்வேதத்தில் வெல்லத்தின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. வெல்லம் போல படுவதில்லை சுத்திகரிக்கப்படுவதில்லை. அதனால் இதில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் பி12 போன்ற பல சத்துக்கள் காணப்படுகின்றன. உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு வெல்லம் ஒரு சிறந்த உணவாகும். பழங்காலத்தில் இருந்தே, இனிப்பிற்கு வெல்லம் தான் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. உடலில் ரத்தம் விருத்தி அடையவும் தசை வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது என ஆயுர்வேதத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


நுரையீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் வெல்லம்


வெல்லம் நுரையீரலில் சேரும் அழுக்குகளையும் நச்சுக்களையும் வெளியேற்றும் திறன் பெற்றது. நுரையீரலில் சிக்கி இருக்கும் கார்பன் துகள்களை அகற்றும் கொண்டுள்ளது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கு பயனுள்ள தீர்வைத் தரும். 


ரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் வெல்லம்


இரும்புச்சத்து நிறைந்துள்ள வெல்லம் ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆற்றல் பெற்றது. வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது இதற்கு காரணம். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும். என்றால் ரத்த அழுத்தமும் ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.


குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெல்லம்


செரிமானம் சிறப்பாக இருந்தால், நோய்கள் நம்மை அண்டாது. செரிமானம் சிறப்பாக இருக்க குடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வெல்லம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்பட்டு வயிற்றில் வாயு உருவாதல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உணவுக்குப் பின் வெல்லம் சாப்பிடுவது தீர்வை அளிக்கும். செரிமான திரவங்களை தூண்டி விட்டு ஜீரணத்தை சரி செய்யும் சக்தி வெல்லத்திற்கு உண்டு.


மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!


ஜலதோஷம் தொண்டை வலியை போக்கும் வெல்லம்


வெல்லம் உடலுக்கு சூட்டை தரக்கூடியது. எனவே இருமல் ஜலதோஷம், சளி போன்றவை இருந்தால் சாப்பிடுவது நன்மை பயக்கும். வெல்லம் எலுமிச்சை இஞ்சி சேர்த்த பானம், இருமல் தொண்டை வலி பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கும். வெல்லம் சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.


உடலில் உள்ள பலவீனம், சோர்வை நீக்கும் வெல்லம்


இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் வெல்லம் விரைவில் சோர்வை போக்கி ஆற்றலை அளிக்கிறது. மிகவும் சோர்வாக உணர்ந்தால், பானகம் அருந்துவது நல்ல பலன் கிடைக்கும். பானகத்தில் சுப்பு எலுமிச்சையும் சேர்ப்பதால், கூடுதல் பலன்களை பெறலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வையும் நீக்கி, புத்துணர்ச்சியை தரும் ஆற்றல் வெல்லத்திற்கு உண்டு.


கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெல்லம்


உடல் உள் உறுப்பை சுத்தம் செய்யும் ஆற்றலைக் கொண்ட வெல்லம் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கல்லீரலில் சேரும் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி அதனை ஆரோக்கியமாக வைக்கிறது. புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்யும் கல்லீரல் சுத்தம் செய்கிறது. இதனால் அதை அவ்வப்போது டேட் ஆப் செய்வது அவசியம். இதற்கு வெல்லம் மிகச் சிறந்தது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தயிர் சாதம்..... சுவையிலும் ஆரோக்கிய நன்மைகளிலும் டாப் டக்கர்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ