டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்க
பெருஞ்சீரகம் அல்லது சோம்பை பல வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக உட்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலில் பித்தம் மற்றும் வாதம் சீராக இருக்கும். கடுமையான பல நோய்கள் வராமல் அதடுக்கும் ஆற்றல் சோம்பிற்கு உண்டு.
பெருஞ்சீரகம் அல்லது சோம்பை பல வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக உட்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலில் பித்தம் மற்றும் வாதம் சீராக இருக்கும். கடுமையான பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் சோம்பிற்கு உண்டு.
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. செரிமான பிரச்சனைகள் தவிர, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நோய்களுக்கு நன்மை பயக்கும். பெருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள மருத்துவ குணங்கள் பல ஆபத்தான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. பெருஞ்சீரகத்தை உட்கொள்வதால் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் குறைகிறது.
தினமும் சோம்பு சாப்பிடுவதால் எந்தெந்த பிரச்சனைகள் குணமாகும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், அதிக பட்ச பலனை பெற எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்?
பெருஞ்சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Fennel Seeds)
கண் பார்வை கூர்மை:
பெருஞ்சீரகம் ஆயுர்வேதத்தில் நேத்ர ஜோதி என அழைக்கப்படுகிறது. உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் கண்களுக்கு முக்கியமான வைட்டமின் ஏ உள்ளது.
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்:
பெருஞ்சீரகம் என்னும் சோம்பு உடலின் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்க உதவுகிறது. இதனால், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் சேரும் நச்சுக்கள் நீக்கப்பட்டு, அதன் ஆரோக்கியம் மேம்படும்.
கொழுப்பு எரிக்கும் ஆற்றல்:
பெருஞ்சீரகம் என்னும் சோம்பு வளர்சிதை பசியைக் குறைக்கிறது மற்றும் மக்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இந்த நார்ச்சத்து நிறைந்த விதை உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
அசிடிட்டியில் இருந்து நிவாரணம்
வயிற்றில் வாயு மற்றும் அசிடிட்டியால் அவதிப்படுபவர்கள் சாப்பிட்ட பின் பெருஞ்சீரகம் உட்கொள்வதால் கட்டாயம் பலன் பெறலாம். பெருஞ்சீரகம் குடலில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, வாயுவை உண்டாக்கும் பாக்டீரியாவைக் குறைப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்றல்:
சோம்பு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகத்தில் அனெத்தோல் காணப்படுகிறது. இது மார்பக மற்றும் கல்லீரல் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுப்பதிலும் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதிலும், அனெத்தோல் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
மேலும் படிக்க | அடாவடி கெட்ட கொழுப்பை அசால்டாய் விரட்டி அடிக்கும் எளிய உணவுகள்
பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு:
கருஞ்சீரகம் அனெத்தோல் உள்ளது, இது பால் சுரப்பதை அதிகரிக்க உதவுகிறது. பெருஞ்சீரகத்தை சாப்பிடுவதால் பால் ஊறுவதை அதிகரிக்கும் புரோலேக்டின் ஹார்மோன் அதிகரிக்கிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன .
மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்:
பெருஞ்சீரகம் ஆக்ஸிடாஸின் மற்றும் புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இவை இரண்டும் மாத விடாய் காலத்தில் வலியை ஏற்படுத்தும் இரண்டு ஹார்மோன்கள். எனவே, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற பெருஞ்சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பெருஞ்சீரகத்தை உட்கொள்ளும் சரியான முறை
வெந்தயத்தை பல வழிகளில் உட்கொள்ளலாம். நீங்கள் பெருஞ்சீரகம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை பானமாக குடிக்கலாம். பெருஞ்சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக குடிக்கலாம். அதைத் தவிர பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இதன் மூலம் சோம்பின் பயனை முழுமையாக பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரம்பு தளர்ச்சி முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் முருங்கை...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ