Health benefits of Drumstick: முருங்கை என்னும் அதிசய உணவின் அருமை பெருமையை உணர்ந்த நமது பெரியவர்கள், முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள். அதாவது பலவிதமான நோய்களை வராமல் தடுக்க்கும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கையின் பூக்கள், விதைகள், இலைகள், காய்கள் மற்றும் வேர்கள் அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
முருங்கையில், வைட்டமின்கள் (ஏ, சி மற்றும் ஈ), தாதுக்கள் (கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு) மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். முருங்கையில் குர்செடின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன
நரம்பு மண்டலம்: நரம்பு தளர்ச்சி நீங்க முருங்கை வேர் மிகவும் உதவும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, சிறிதளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோய்: முருங்கை இலையில் உள்ள இன்சுலின் போன்ற ஒரு பொருள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, முருங்கைக்காயில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
இரத்த அழுத்தம்: முருங்கையில் காணப்படும் குர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் தமனிகளில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் இதயத் துடிப்பையும் சீராக்குகிறது.
உடல் பருமன்: முருங்கைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, முருங்கையில் காணப்படும் குளோரோபில் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
கொலஸ்ட்ரால்: முருங்கைக்காயில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன இரத்தத்தில் உள்ள எல்டிஎல் என்னு கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயம் குறைக்கிறது.
மலச்சிக்கல்: முருங்கை இலையில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இது தவிர, முருங்கையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல விதமான செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.