Cholesterol Control Tips: இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், மன அழுத்தம், யூரிக் அமிலம், இரத்த அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. குறிப்பாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவது மிக பொதுவான ஒரு பிரச்சனையாக ஆகி வருகிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மேலும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளில் இருந்து விலகி இருப்பது அவசியம். அதிக எண்ணெய் சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். வெளியில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
உடலில் உள்ள எல்டிஎல் அதாவது கெட்ட கொழுப்பைக் குறைக்க சில வகை உணவுகளை சேர்த்துக் கொள்வது (Health Tips) பலன் தரும். கொலஸ்ட்ராலை குறைக்க ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள சில உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் கொழுப்பை கரைக்க உதவும். அந்த வகையில், சில வகை சட்னிகளும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் சட்னி வகைகளையும், அதனை தயாரிக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.
பூண்டு கொத்தமல்லி சட்னி
பூண்டு மற்றும் கொத்தமல்லி இரண்டுமே கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. அதோடு, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கும். கொலஸ்ட்ரால் நோயாளிகள் கண்டிப்பாக பூண்டு சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.
பூண்டு கொத்தமல்லி சட்னி தயாரிக்கும் முறை
சட்னி தயாரிக்க 1 கப் பிரெஷ்ஷான கொத்தமல்லி இலைகள் மற்றும் 4-5 பூண்டு பல், 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு, சீரகம் சேர்த்து சட்னியை அரைக்கவும்.
மேலும் படிக்க | சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்
இஞ்சி புதினா சட்னி
இஞ்சி மற்றும் புதினா இரண்டுமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி சாப்பிடுவது எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. மேலும், புதினாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இஞ்சி புதினா சட்னி தயாரிக்கும் முறை
சட்னி தயாரிக்க 1 கப் புதிய புதினா இலைகள், அரை கப் கொத்தமல்லி இலைகள், 1 அங்குல இஞ்சி, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து சட்னி தயார் செய்ய வேண்டும்.
வெங்காயம் தக்காளி சட்னி
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் எல்டிஎல் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது. வெங்காயமும் பூண்டைப் போலவே, இதய ஆரோக்கியத்திற்கு நனமை பயக்கும். இதில் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் உள்ளது
வெங்காயம் தக்காளி சட்னி தயாரிக்கும் முறை
சட்னி தயாரிக்க 2 நடுத்தர அளவிலான தக்காளி, 1 சிறிய வெங்காயம், பூண்டு 3-4 பல் எடுத்துக் கொள்ல வேண்டும்.1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி 1 டீஸ்பூன் சீரகம், 2 பச்சை மிளகாய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். மென்மையாகும் வரை சமைத்து, அது ஆறியதும், சட்னியாக அரைக்கவும். இந்த சட்னி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ