உடல் எடையை குறைக்கும் இஞ்சி: உடல் பருமன் பிரச்சனையால் சிரமப்படுபவர்கள், அதிகரித்து வரும் எடையைக் குறைக்க மக்கள் பல வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்த்து வழிந்து உடற்பயிற்சிகளை செய்வதும்,  எடை குறைப்பு சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுவதும் என மெனக்கெட்டு பணம் செலவழித்தாலும் குறையாத எடையை சுலபமாக இஞ்சி குறைக்கு,. உண்மையில் எடை குறைப்புக்கு சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க எப்போதும் இயற்கையான முறைகளை பின்பற்ற வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகரித்து வரும் எடையை ஆரோக்கியமான வழியில் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் இஞ்சியைப் பயன்படுத்தலாம். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தும் இஞ்சி உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.


எடை இழப்புக்கு இஞ்சியை பல வழிகளில் உட்கொள்ளலாம். எடை இழப்புக்கு இஞ்சியை எப்படி உட்கொள்வது என்பதற்கான சில வழிகளை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ


இஞ்சி தேநீர்
எடை இழப்புக்கு இஞ்சி டீயை உட்கொள்ளலாம். இதை தயாரிக்க, ஒரு அங்குல இஞ்சியை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி சிறிது தேன் சேர்க்கவும். இந்த தேநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். தினசரி இந்த இஞ்சி டீயை குடித்து வந்தால், உடல் எடை கடகடவென குறையத் தொடங்கும். அதுமட்டுமின்றி, செரிமான பிரச்சனைகளும் குணமாகும்.


இஞ்சி மற்றும் எலுமிச்சை
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். இதற்கு 50 கிராம் இஞ்சியை இரண்டு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அது பாதியாக குறைந்ததும் ஒரு கிளாஸில் வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால், விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
 
இஞ்சி மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
இஞ்சி மற்றும் ஆப்பிள் வினிகரை உட்கொள்வது எடை இழப்புக்கு நன்மை பயக்கும். ஆப்பிள் சைடர் வினிகரில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது உடலில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவும். ஒரு கப் இஞ்சி கசாயத்தில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடிக்கவும். இதைத் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை சட்டென்று குறையும்.


மேலும் படிக்க | Peanut Harm: எந்த நோய் இருந்தால் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது?


சுக்குப் பொடி
எடை இழப்புக்கு உலர்ந்த இஞ்சியான சுக்கும் உதவும். சுக்குப் பொடியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வீக்கத்தை அகற்றுவதோடு எடை இழப்புக்கும் உதவும். சுக்குப்பொடியை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம். இது தவிர, இதை காய்கறி அல்லது சூப்பில் சேர்த்தும் சாப்பிடலாம்.


அதிகரித்து வரும் எடையை குறைக்க இஞ்சியை பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனை ஏதேனும் இருந்தால், இஞ்சி மற்றும் சுக்கு மூலம் உடல் எடையை குறைப்பதற்கு முன்னதாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | உயிரற்ற நரம்புகளுக்கும் உயிர் கொடுக்கும் ‘மேஜிக்’ மசாலா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ