நம் இயற்கை உணவுகளில் மிக முக்கியமான ஒரு பொருள் இஞ்சி ஆகும். உலகம் முழுவதும் இஞ்சியானது பல உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி சுவை மற்றும் வாசனைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் இது பல மருத்துவப்பலன்களை வழங்கக்கூடிய ஒன்றாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஞ்சி ஒரு இயற்கை மூலிகை
உண்மையில் இஞ்சி ஒரு இயற்கை மூலிகை ஆகும். இது ஆண் மற்றும் பெண் இருவரின் பாலியல் ஆரோக்கியத்தையும் வெகுவாக அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இன்று நாம் இஞ்சி ஊறுகாய் செய்வதற்கான செய்முறையை காண உள்ளோம். இதன் சுவை காரமாக இருந்தாலும், இதில் என்னற்ற மருத்துவ பண்புகள் இருக்கிறது. இஞ்சி ஊறுகாய் மாதவிடாய் காலங்களில் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது, எனவே இஞ்சி ஊறுகாயை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!


இஞ்சி ஊறுகாய் தயாரிக்க தேவையான பொருட்கள்-
இஞ்சி 250 கிராம் 
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் 
புளி 100 கிராம் 
வெல்லம் 50 கிராம் 
மிளகாய் தூள் சுவைக்கு ஏற்ப
உப்பு சுவைக்கு ஏற்ப
வெந்தயம் விதைகள் 1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை 3-4 
கடுகு 1 தேக்கரண்டி 
எண்ணெய் 1/2 கப் 
காய்ந்த மிளகாய் 2 
பூண்டு 3-4 
சிட்டிகை பெருங்காயம் 


இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி?
இஞ்சியை நன்கு கழுவி உலர வைக்கவும். பிறகு, இஞ்சியின் தோலை நீக்கி, நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து, புளியைப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் வெந்தய விதைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு வறுக்கவும். இதன் பிறகு ஆறியதும் கிரைண்டரில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதன் பிறகு, ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி துண்டுகளை வதக்கவும். பின்னர் இஞ்சி வெளிர் பழுப்பு நிறமாக மாறியதும், அதை எடுத்து தனியாக வைக்கவும். பிறகு, புளி தண்ணீர், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் பெருங்காயம் இதனுடன் சேர்த்து அரைக்கவும். பிறகு அதனுடன் சிறுது வெல்லம் மற்றும் வெந்தய பொடி சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு சூடான எண்ணெயில் கடுகு மற்றும் பூண்டை வதக்கவும். அதன் பிறகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயை மிருதுவாகும் வரை வறுக்கவும், அதன் பின் கேஸ்ஸை அனைத்துக் கொள்ளவும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் இஞ்சித் துண்டுகள் மற்றும் ரெடி செய்து வைத்த கலவையைப் போடவும். அதன் பிறகு, தாலிப்பை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தயார் செய்த ஊறுகாயை ஒரு ஜாடியில் நிரப்பி சேமிக்கவும். இப்போது உங்கள் காரமான இஞ்சி ஊறுகாய் தயார்.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கணுமா? இந்த 7 விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ