Good foods to Sperm count: விந்தணுக்களை அதிகரிக்கும் உணவுகள்
ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கை, அவர்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் கூ்ட்டும் உணவுகள் எவை தெரியுமா?
வாழ்க்கையின் இன்பம் மற்றும் துன்பத்திற்கு மட்டுமல்ல தரத்திற்கும் உணவு பழக்க வழக்கங்களே அடிப்படை என்பது பல்வேறு ஆராய்ச்சிகள் கூறும் உண்மை. அதேபோல், ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையும், அவர்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது.
உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். ஆண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைபாடு தான். உணவே மருந்து என்ற முதுமொழி ஒருபுறம் என்றால், எதை உணவாக உடலில் விதைக்கின்றோமோ, அதுவே விந்தணுவின் தரமாய் வெளிவருகிறது என்று புதுமொழி சொல்கிறது.
பூசணி விதைகளில் விந்தணுவை அதிகரிக்கச் செய்யும் துத்தநாகம் இருக்கிறது. இது ஆண்களின் விந்தணுக்களின் வீரியமான இயக்கத்தையும் தரத்தையும், டெஸ்டோஸ்டிரோனையும் (testosterone) அதிகரிக்கும். எனவே, பூசணி விதையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Also Read | Healthy Juice: ஆண்மையை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட பீட்ரூட்
விட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுப் பொருட்கள் விந்தணுக்கள் உருவாக்கத்திற்கும், அதன் தரத்திற்கும் பக்கத்துணையாக இருப்பவை. எனவே, ஆரஞ்சு உட்பட விட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
ஆழ்ந்த பச்சை நிறமுள்ள காய்கறிகளில் விட்டமின் பி இருக்கும். இது ஆண்மையை அதிகரிக்க வல்லது. மாதுளம்பழத்தில் இருக்கும் ஆண்டிஆக்சிடெண்ட், டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் நீரீன் அளவு சரிவர பராமரிக்கப்பட்டால், விந்தணுக்கள் இயல்பாக இருக்கும்.
Also Read | அதிக உப்பு நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆபத்து, எவ்வளவு உப்பை உணவில் சேர்க்கலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR