Health News: அதிக உப்பு நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆபத்து, எவ்வளவு உப்பை உணவில் சேர்க்கலாம்?

உப்பு இல்லாத உணவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உப்பு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை அளிக்கின்றது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 9, 2021, 04:08 PM IST
  • உப்பு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை அளிக்கின்றது.
  • அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலின் நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் பலவீனமடைகின்றன.
  • ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான உப்பின் அளவு உங்கள் உடல் செயல்பாடுகளின் அளவை பொறுத்து இருக்கும்.
Health News: அதிக உப்பு நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆபத்து, எவ்வளவு உப்பை உணவில் சேர்க்கலாம்? title=

Health News on Salt: உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். உணவில் உப்பு குறைந்தாலும் சரி, சிறிய அளவு அதிகரித்தாலும் சரி, அது உணவின் சுவையை கெடுத்து விடும். உப்பு இல்லாத உணவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உப்பு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை அளிக்கின்றது. 

உப்பை (Salt) உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சோடியம் மற்றும் குளோரைடு தாதுக்களைப் பெறுகிறோம். நமது உடல் செயல்பாடுகளுக்கு சோடியம் முக்கியமானது. மேலும் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க குளோரைடு முக்கியமானது. ஆனால் உப்பை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.சமீபத்தில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வின்படி, உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, ஆபத்தாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது. 

உப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு என்ன கூறுகிறது

சயின்ஸ் டிரான்சேஷனல் மெடிசின் குறித்து வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், உணவில் அதிக உப்பை சேர்ப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் (Immunity System) உயிரணுக்களின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உடலுக்கு ஆபத்தான் பாக்டீரியாக்களை நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்க முடிவதில்லை. ஈ.கோலை (E.Coli) பாக்டீரியாவால் சிறுநீரக நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம்.

ALSO READ: அயோடின் குறைபாடு இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? சமாளிப்பதற்கான வழிகள் என்ன?

ஆய்வு எவ்வாறு செய்யப்பட்டது?

ஆராய்ச்சியாளர்களின் குழு எலிகளை ஆய்வு செய்ய லிஸ்டீரியா பாக்டீரியாக்களை அவற்றுள் செலுத்தின. அதன்பிறகு பாதிக்கப்பட்ட எலிகளில் எந்த எலிகளுக்கு அதிக உப்பு உள்ள உணவு வழங்கப்பட்டதோ, அவற்றின் நிலைமை மிகவும் சிக்கலாக மாறியது கண்டறியப்பட்டது. அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலின் நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் பலவீனமடைகின்றன. இது முக்கியமாக பாக்டீரிய சிறுநீரக (Kidney) நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது.

எவ்வளவு உப்பை உட்கொள்வது உடலுக்கு சரியாக இருக்கும்? 

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அல்லது 5 கிராமை விட குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும். இது ஒரு நிலையான அளவாகும். குழந்தைகளில் இந்த அளவு குறைக்கப்பட வேண்டும். இது தவிர, ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான உப்பின் அளவு உங்கள் உடல் செயல்பாடுகளின் அளவையும் பொறுத்து இருக்கும். இதை அறிய உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

ALSO READ:Health News: அத்திப்பழமும் அதிகமானால் ஆபத்துதான், விவரம் இதோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News