புது டெல்லி: இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் குவாட்ரிவலன்ட் மனித பாப்பிலோமா வைரஸ் (qHPV) தடுப்பூசி மலிவு விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி சில மாதங்களில் கிடைக்கும். அந்த தடுப்பூசிக்கான விலையை சில மாதங்களில் அறிவிப்போம். இதன் விலை ரூ 200-400 ஆக இருக்கலாம். ஆனால் விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பிறகு, விலைக் குறித்து நாங்கள் அதை இறுதி செய்வோம் என்று அதார் பூனாவல்லா தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியான “செர்வாவாக்” (Cervavac Vaccine) அறிவிப்பின் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "இந்தியாவிலேயே முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதம மந்திரிக்கு நன்றி என்றார். இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், இளம் வயதுப் பெண்களிடையே பரவலாக உள்ளது. அதற்கான தடுப்பூசி மலிவு விலையில் இனி கிடைக்கும்" என்றார். 


மேலும் படிக்க: உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் உணவுகள்!


சொ்வாவாக் (Cervavac Vaccine) தடுப்பூசியை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சிங், அதார் பூனாவாலா மற்றும் அவரது மருத்துவ விஞ்ஞானிகளின் குழுவை வாழ்த்தி பாராட்டினார். 


மத்திய அமைச்சர் சிங், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது இந்தியாவில் அதிகமாகப் பரவும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், உலகிலுள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கிற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டி பேசினார். 


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1.25 லட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் இறக்கின்றனர் என்றும் தற்போதைய மதிப்பீடுகள் கூறுகின்றன என்றும், இந்தியாவில் 16 அல்லது 18 வயதுடைய ஹெச்பிவிகளால் 83 சதவிகித கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். 


மேலும் படிக்க: புற்றுநோய் அபாயம்: இவற்றை தினசரி உணவில் சேர்த்தால் புற்றுநோயை தவிர்க்கலாம்


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத்தில் வரலாற்று மைல்கல். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குவாட்ரிவலன்ட் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி (qHPV) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பயோடெக்னாலஜி துறையால் அறிமுகபப்டுத்தப்படது என்று சிங் ட்வீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதனைத்தொடர்ந்து பேசிய  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா (Adar Poonawalla) "அமைச்சர் சொன்னது போல் இன்று முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் சந்தையில் கிடைக்கும். முதலில் அதை நம் நாட்டுக்கும், பின்னர் உலகத்துக்கும் கொடுப்போம் என்று கூறினார்.


தடுப்பூசி தயாரிப்பது குறித்து பூனாவாலா கூறுகையில், "இரண்டு ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ்களை தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில் தயாராகி வருகிறோம்" என்றார்.


மேலும் படிக்க: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: எந்த வயதினர் எந்த டயட்டை பின்பற்ற வெண்டும்? விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ