இந்திய உணவுகள் அதிக கலோரிகளைக் கொண்டது எனவும் இது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது இல்லையென்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது தவறான செய்தி என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன, உலக மக்கள்தொகையில் 88%-க்கும் மேலான 122 நாடுகளைச் சேர்ந்த ,15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் உடல் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் இந்தியர்கள் தான் அதிகளவில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள் என்பது நிரூபணமாகி இருக்கிறது. அதற்கு காரணம் இந்திய உணவுகள் தான், அதில் நிறைந்துள்ள பல ஊட்டச்சத்துக்கள் நம்மை ஆரோக்கியமாக வைக்கின்றன. குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த உணவு சிறந்தது என்பது தாய்க்கு தெரியும், போதுமானவரை வெளியில் விற்கும் உணவுகளை சாப்பிடுவதை வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும்.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நேரத்திற்கு எடுத்து கொள்கின்றனர், அந்த நேரங்களை தான் நமது உடலும் பின்பற்ற தொடங்கிவிடுகிறது. அப்படி இருக்கையில் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவு நேரத்தை தவிர்த்து தவறான நேரத்தில் உணவு சாப்பிட்டால் உங்களுக்கு செரிமான கோளாறு மற்றும் ஆரோக்கியமற்ற குடல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதனால் எப்போதும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள். ஆயுர்வேதத்தின் படி காப்பர் தட்டுகளில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது, பீங்கான் போன்ற பாத்திரங்களை பயன்படுத்தாமல் சாப்பிடுவதற்கு காப்பர் பாத்திரத்தை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை தரும்.
மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க
காப்பர் கலந்த உணவு மற்றும் தண்ணீர் இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் நல்லது. அதேபோல பழங்காலத்தில் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க வெள்ளி பாத்திரங்களில் சாப்பிடும் பழக்கத்தை மக்கள் கடைபிடித்து வந்தனர். மேலும் காப்பர் பாத்திரத்தில் உணவை சமைத்து சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது, மேலும் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது, இதில் சமைக்கும் உணவு சுவையாகவும், ஊட்டச்சத்தை வழங்குவதாகவும் உள்ளது. பெரும்பாலான இந்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு ஆரோக்கியமானதாக கருத்தப்படுகிறது. இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் எண்ணெய் உணவைத் தவிர்க்க வேண்டும், தைராய்டு இருந்தால் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். மேலும் நீங்கள் உண்ணும் உணவு ஜீரணமடைய வேண்டும், அதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வது போன்ற பல உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ