பச்சை தக்காளி சாப்பிட்டால் இந்த நோய்கள் பறந்து போகும்
பச்சைத் தக்காளி சத்துக்களின் களஞ்சியமாகும், இதன் பலன்களை அறிந்தால், சிவப்பு தக்காளியை சாப்பிட மறந்துவிடுவீர்கள்.
தக்காளியின் பெயரைச் சொன்னவுடனேயே சிவப்பு நிறம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் பச்சை நிறத்திலும் தக்காளி உள்ளது. பச்சை தக்காளியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தக்காளியை பொறுத்தவரை, இவை இல்லாமல் எந்த சமையலும் இல்லை என்றே கூட சொல்லலாம். ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் தக்காளியை குழம்பில் சேர்க்கப்படுகின்றன.
சிவப்பு தக்காளியைப் போலவே பச்சை தக்காளியும் சுவையாக இருக்கும். பச்சை தக்காளியில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கண்பார்வை மேம்படுத்த
பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். பச்சை தக்காளி சட்னி அல்லது சாலட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்பார்வையை வலுப்படும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கணுமா? இந்த 7 விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்!
தோலுக்கு நன்மை பயக்கும்
பச்சை தக்காளி சருமத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன, இது தோல் செல்களை மேம்படுத்த உதவுகிறது. பச்சை தக்காளியை பயன்படுத்துவதன் மூலம் சுருக்கங்கள் நீங்கி சருமம் அழகாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பச்சை தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதனை உண்பதால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வரும் அபாயம் நீங்கும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
பச்சை தக்காளியை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
ரத்த உறைவை உண்டாக்கும்
பச்சை தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே ரத்தம் உறைவதற்கு உதவுகிறது. நீங்கள் எங்காவது காயப்பட்டால், வைட்டமின் கே அங்கு இரத்தம் உறைந்து இரத்தப்போக்கு நிறுத்துகிறது.
மேலும் படிக்க | ஒரு கப் இஞ்சி தண்ணீர் குடித்தால் சளி மற்றும் இருமல் எட்டிப்பார்க்காது
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ