ஆரோக்கியமாக இருக்கவும், நோயில்லாத வாழ்க்கையை வாழவும் பழங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்று. அதிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களைத் தன்னுள் கொண்ட, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் ஓரே பழம் கொய்யா தான். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இது செரிமானம் மற்றும் பல பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது. ஆனால் கொய்யாப்பழத்தை விட கொய்யா இலைகள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, மேலும் இதை ஒரு சிறப்பான முறையில் சாப்பிடலாம். வாருங்கள் எப்ப்டி என்று இந்த கட்டுரை மூலம் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொய்யா இலைகளின் 5 நன்மைகள்
பல மருத்துவ குணங்கள் கொய்யா இலைகளில் காணப்படுகின்றன, அவை உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இந்த இலையின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | பெண்களின் அந்தரங்க உறுப்பை பராமரிக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்


1. எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்
காம்ப்லேக்ஸ் ஸ்டார்ச் உருவாகும் போது அது சர்க்கரையாக மாற்றத் தொடங்கும். இது நம் உடல் ​​எடையை அதிகரிக்கச் செய்கிறது. கொய்யா இலைகள் இந்த செயல்முறையை நிறுத்த உதவுகிறது, இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், இந்த இலைகள் கார்போஹைட்ரேட்டைக் குறைக்கும் சக்தி கொண்டவை, எனவே இதை சாப்பிட்டால் உடல் பருமன் நீங்கும்.



2. வயிற்றுப்போக்கு நீங்கும்
வயிற்றுப்போக்கு பிரச்சனையில் கொய்யா இலைகள் மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு அரை கப் அரிசி மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.


3. கொலஸ்ட்ரால் அளவு குறைக்க உதவும்
எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும், இதற்கு கொய்யா இலை டீ குடிக்க ஆரம்பிக்கலாம், சில மாதங்கள் இந்த தேநீரை இப்படி குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கணிசமாக குறையும்.


4. கூதலுக்கு நல்லது
கொய்யா இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கொய்யா இலையை அரைத்து தலையில் தடவி வந்தால் கூந்தல் பட்டுப் போலவும் பளபளப்பாகவும் மாறும்.


5. நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்
கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர், ஆல்ஃபா-குளுக்கோசிடேஸ் நொதியின் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை மாயாஜாலமாகக் குறைக்க உதவுகிறது. இதற்கு, இந்த இலையின் தேநீரை தொடர்ந்து சுமார் 3 மாதங்களுக்கு குடிக்கவும்.


கொய்யா இலை தேநீர் செய்வது எப்படி?
முதலில், சுமார் 10 புதிய கொய்யா இலைகளை நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு சாதாரண தீயில் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது அதில் கழுவிய கொய்யா இலைகளை சேர்த்து, சுவை மற்றும் நிறத்திற்காக சாதாரண தேயிலை இலைகளை சேர்க்கவும். இப்போது அதை 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, இறுதியாக இனிப்புக்காக தேன் சேர்க்கவும். உங்கள் கொய்யா இலை தேநீர் ரெடி.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR