Apple Cider vs PCOS Treatment: ஆப்பிள் சிடர் வினிகரை பெண்கள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். ஆப்பிள் சிடர் வினிகர் ஏன் பெண்களுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்துக் கொண்டால் என்றுமே அதை தவிர்க்க மாட்டார்கள்.
பெண்களுக்கு ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள்
Apple Cider Vinegar Uses for women: ஆப்பிள் சிடர் வினிகர் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் ஆப்பிள் சிடர் வினிகர் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்குகிறது என்பது பலருக்குத் தெரியாது.
உடல் பருமனைக் குறைப்பதில் இருந்து, யோனி தொற்று உட்பட பல பிரச்சனையையும் நீக்கும் ஆப்பிள் சிடர் வினிகர், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதன் மூலம் பல வகையான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. இதில், அசிட்டிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள், ஆக்ஸிஜனேற்றிகள், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் இது மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.?
ஆப்பிள் சிடர் வினிகர் மாதவிடாய் பிரச்சனைகளைக் குறைக்கும்
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். வயிற்று வலி, முதுகு மற்றும் தொடை வலி, வயிற்றுப் பிடிப்புகள், பிடிப்புகள் என்ற உபாதைகளுடன், சோர்வு, எரிச்சல், பசியின்மை, மனநிலை மாற்றங்கள் என பல பிரச்சனைகளை மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து குடிக்கவும். மாதவிடாய் இருக்கும் நாட்களில் இந்த திரவத்தை எடுத்துக் கொள்வது உதிரப் போக்கு முதல் மாதவிடாய் பிரச்சனைகள் வரை அனைத்தையும் சீராக்கும்.
பிறப்புறுப்புத் தொற்றுகளை குறைக்க ஆப்பிள் சிடர் வினிகர்
பிறப்புறப்பு அல்லது யோனி தொற்று பாதிப்பால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு ஆப்பிள் சிடர் வினிகர் அருமருந்தாக செயல்படும். அதுமட்டுமல்ல, அந்தரங்க பகுதியில் அரிப்பு அல்லது வெள்ளைப்படுவதன் காரணமாக வாசனை வெளிப்பட்டாலும் அதற்கு உதவுகிறது இந்த ஆப்பிள் சிடர் வினிகர்.
ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து பிறப்புறுப்பை சுத்தம் செய்யவும். இது பிறப்புறுப்பு தொற்று, பிறப்புறுப்பு அரிப்பு ஆகியவற்றை நீக்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் என பல பிரச்சனைகளையும் தீர்க்கும் பண்புகள் நிறைந்த ஆப்பிள் சிடர் வினிகர், பிறப்புறுப்பின் pH அளவை பராமரிக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் பெண்களின் எடையைக் குறைக்கிறது
வயிறு, இடுப்பு, தொடைகளில் எடை அதிகரித்தாலோ அல்லது கொழுப்பு அதிகரித்தாலோ ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அசிட்டிக் அமிலம் உள்ளது, இது அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும்.
ஆப்பிள் சிடர் வினிகர், பசியைக் குறைக்கிறது. அரை தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகருடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினசரி காலையில் குடிக்கவும். காலையில் குடிக்காவிட்டால், காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பும் இதைக் குடிக்கலாம். சில நாட்களில் எடை குறைவதைக் காணலாம்.
PCOS பிரச்சனையை குணப்படுத்தும் ஆப்பிள் சிடர் வினிகர்
பெண்கள் பெரும்பாலும் பிசிஓஎஸ் அதாவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆப்பிள் சைடர் வினிகர் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கிறது மற்றும் PCOS க்கு சிகிச்சையளிக்கிறது.
மேலும் படிக்க | கோடைக்காலத்தில் உடல் எடையை குறைக்க சூப்பர் வழி
இது தவிர, ஆப்பிள் சீடர் வினிகர் பெண்களின் இரத்த சர்க்கரை மற்றும் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அண்டவிடுப்பின் காலத்தை சமநிலைப்படுத்துகிறது. குழந்தையின்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது
முகத்தில் அதிக முகப்பரு அல்லது பருக்கள் இருந்தாலோ அல்லது சிறு வயதிலேயே சுருக்கங்கள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ, ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
கூந்தலில் பொடுகு பிரச்சனை இருந்தால், தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து தலைமுடியை சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சூப்பர் காய் சுரைக்காய்: சம்மரை கூலாய் கழிக்க சூப்பரா உதவும் சுரைக்காய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR