முடி உதிர்வு சிகிச்சை: கூந்தல் உதிர்வால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். உங்களுக்கும் அந்த பிரச்சனை இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் ஆகியவை மிகப்பெரிய காரணங்களாக கருதப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் தவறான உணவு ஆகியவை ஒருவரது கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முடி உதிர்வு பிரச்சனையை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பலருக்கு தலையில் வழுக்கை கூட ஏற்படுகிறது. 


முடி இழப்புக்கான பொதுவான காரணங்கள்


- மன அழுத்தம்
- உடலில் ஊட்டச்சத்து குறைபாடு
- இரத்த சோகை
- மாதவிடாய்
- கர்ப்பம் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகளின் பயன்பாடு
- தைராய்டு பிரச்சினைகள் 


முடி உதிர்வை நிறுத்துவதற்கான வீட்டு வைத்தியம்


1. தலைமுடிக்கு வெந்தயத்தின் நன்மைகள்


- வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மறுநாள் வெந்தயத்தை அரைக்கவும்.
- அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவவும்.
- காயும் வரை அப்படியே இருக்க விடவும். 
- அதன் பிறகு தண்ணீர் கொண்டு கழுவவும்.
- சில நாட்களில் அதன் விளைவை நீங்கள் காணத் தொடங்குவீர்கள்.


பலன்கள்: வெந்தயம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.


மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி 


2. நெல்லிக்காய் முடிக்கு நன்மை பயக்கும்


- நெல்லிக்காய் பொடியுடன் சீகைக்காய் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
- இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி அது காயும் வரை அப்படியே விடவும்.
- அதன் பிறகு, தலைமுடியை தண்ணீர் கொண்டு கழுவவும்.
- சில நாட்களில் வித்தியாசம் தெரியும்.


நன்மைகள்- முடி உதிர்தல் பிரச்சனையைத் தடுப்பதில் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி முடியை பலப்படுத்துகிறது.


3. கற்றாழை முடிக்கு நன்மை பயக்கும்


- கற்றாழை இலைகளை நடுவில் இருந்து வெட்டி அதன் கூழை நீக்கவும்
- இப்போது அந்த கூழை முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யவும்.
- சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
- சில நாட்களில் முடி உதிர்வு நீங்கும்.


பலன்கள்- முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


4. வெங்காய சாறு முடிக்கு நன்மை பயக்கும்


- வெங்காயத்தை அரைத்து சாறு எடுக்கவும்.
- முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யவும்.
- சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவவும்.
- இவ்வாறு செய்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவலின் துல்லியம், காலக்கெடு மற்றும் உண்மையான தன்மையை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. எங்களின் நோக்கம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே.)


மேலும் படிக்க | நோய்களின் அபாயத்தைத் தணிக்கும் சூப்பர் ஜூஸ்கள்: தினசரி குடித்தால் 100 ஆயுசு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR