ஒருவரது முடியின் வளர்ச்சியானது ஜீன், ஊட்டச்சத்து மற்றும் வெளிப்புற பராமரிப்பு ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.  கூந்தல் அழகுடன் தொடர்புடையதாக உள்ளது, ஒரு பெண்ணுக்கு அழகே அவளது கூந்தல் தான், பெண்கள் பலரும் தங்கள் கூந்தல் அழகை பராமரிக்க பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.  சிலர் கூந்தலை முறையாக கவனிக்காமல் இருப்பதாலும், ரசாயனங்கள் அதிகம் நிறைந்த பொருட்களை தலை முடிக்கு பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  நாம் சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம்.  நமது உடலுக்கு எப்படி ஊட்டச்சத்து அவசியமானதோ அதேபோல நமது தலைமுடிக்கும் ஊட்டச்சத்து அவசியமானது.  நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும்.  முடியின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் பழங்கள், பச்சை சாலடுகள், ஸ்ப்ரவுட்ஸ், பச்சை காய்கறிகள், தயிர், பாலாடைக்கட்டி, பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள், மீன், இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்களுக்கு மூட்டு வலியா? அப்போ தினமும் இந்த அற்புதமான தேநீர் குடிங்க


முளைகட்டிய தானியங்கள் மற்றும் தானியங்களில் அமினோ அமிலங்கள் உள்ளன மற்றும் அவை முடிக்கு நன்மையளிக்கும்.  ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை, போதுமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கிறது.  எண்ணெய் பசை அதிகமாக உள்ள கூந்தலுக்கு வாரத்திற்கு மூன்று முறையும், வறண்ட கூந்தலுக்கு வாரத்திற்கு இரண்டு முறையும் தலைக்கு குளிக்க வேண்டும்.  தலைக்கு குளிப்பது எப்போதுமே முடிக்கு தீங்கினை விளைவிக்காது, நாம் பயன்படுத்தக்கூடிய கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்கள் தான் நமது முடிக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் எலுமிச்சை சாறு சேர்த்து அலசலாம்.


தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்த பிறகு, முடியை துண்டை வைத்து அழுத்தமாக துடைக்காதீர்கள். தலை குளித்த பின்னர் முடியிலுள்ள ஈரத்தை உறிஞ்சுவதற்காக சிறிது நேரம் தலையில் துண்டை சுற்றி வையுங்கள். முடி நன்கு உலர்ந்ததும் அகலமான பற்கள் கொண்ட சீப்பினை வைத்து உச்சந்தலையிலிருந்து முடி நுனிவரை ஏதேனும் சிக்கு இருந்தால் அதனை சீவி சரிசெய்ய வேண்டும்.  முடிந்தவரை உங்கள் முடியை இயற்கையாக உலர வைக்க முயற்சி செய்யுங்கள், ஹேர் ட்ரையர்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க பழகுங்கள்.  தலையில் எண்ணெய் தேய்த்து லேசான மசாஜ் கொடுப்பதால் முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டம்  தூண்டப்படும், அதேசமயம் தலை முடிக்கு கடினமாக மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.  சற்று வெதுவெதுப்பான எண்ணெயை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும், இளம் சூடாக உள்ள எண்ணெயை தடவுவது முடியின் வளர்ச்சிக்கும் பல முடி பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வினை கொடுக்கும்.  சுத்தமான தேங்காய் எண்ணெயை சூடாக்கி தலைமுடிக்கு தடவி, பின்னர் சூடான டவலை வைத்து தலையை காட்டுங்கள்.  அதன்பிறகு கெமிக்கல் குறைந்த ஷாம்பூவை தலைக்கு பயன்படுத்தி குளித்துவிட்டு கண்டிஷ்னரை பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க 2 ரூபாய் இருந்தா போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ