உடல் எடை ஓவரா எகிறுதா? இரவு உணவில் இதை சாப்பிடுங்க.. சூப்பரா குறையும்

Weight Loss Tips: பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 06:55 PM IST
  • வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது.
  • இதனால், ஒருவருக்கு நல்ல தூக்கம் கிடைப்பதோடு, எடையும் விரைவில் குறையும்.
  • வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது.
உடல் எடை ஓவரா எகிறுதா? இரவு உணவில் இதை சாப்பிடுங்க.. சூப்பரா குறையும் title=

உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்: பல நேரங்களில் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறோம். சத்துள்ள பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழச்சாறுகளை உட்கொள்கிறோம். ஜிம் சென்று பல வித முயற்சிகளை எடுக்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். எனினும், இப்படி பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். 

உடல் எடையைக் குறைப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும்.  மற்றும் சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். இரவில் தூங்கும் முன் நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் எடையுடன் தொடர்புகொண்டுள்ளது. இரவு உணவில் சில உணவுகளை சேர்த்தால், தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பு முற்றிலும் கரைந்துவிடும். இதனால் உங்கள் எடையும் குறையும். உடல் எடையை குறைக்க இரவில் என்ன சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம். 

பாதாம் 

இரவில் தாமதமாக ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டால், பல நன்மைகள் கிடைக்கும். இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இரவில் பாதாம் சாப்பிட்டால், அது தசைகளை சரிசெய்யும்.

பிரெட் மற்றும் பீனட் பட்டர் 

வேர்க்கடலையில் புரதம் மிக நல்ல அளவில் காணப்படுகிறது. இது தசைகளை சரிசெய்யும் திறன் கொண்டது. டிரிப்டோபன் என்பது ஒரு வகை அமினோ அமிலம். இது தூக்கத்தை மேம்படுத்துகிறது. நீங்கள் பிரெட் மற்றும் பீனட் பட்டர் ஆகியவற்றை ஒன்றாக உட்கொண்டால், உங்கள் வளர்சிதை மாற்றம் மேம்படும் மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்படும். 

வாழைப்பழம்

வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதனால், ஒருவருக்கு நல்ல தூக்கம் கிடைப்பதோடு, எடையும் விரைவில் குறையும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பி இருக்க உதவுகிறது. இதனால் இனிப்பு சாப்பிடும் பழக்கமும் குறைகிறது. வாழைப்பழத்தில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது தசைகளை தளர்த்துவதுடன் மன அழுத்தம் மற்றும் பிடிப்புகளையும் குறைக்கிறது.

மேலும் படிக்க | சுகர் உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த இலை சாப்பிடுங்க

தயிர்

தயிர் சாப்பிட்டால் பல பிரச்சனைகள் தீரும். இது குறைந்த கலோரி கொண்டுள்ளதோடு புரதம் நிறைந்த சத்தான உணவாக உள்ளது. உங்கள் இரவு உணவில் ஒரு கிண்ணம் தயிர் சேர்த்துக் கொண்டால், உங்கள் செரிமான பிரச்சனை தீரும். ஒரு ஆய்வின் படி, தூங்கும் முன் தயிர் சாப்பிடுவது புரதத் தொகுப்பை அதிகரிக்கிறது.

இந்த விஷயங்கள் உடல் எடையை குறைக்க உதவும்

இரவில் லேசான உணவை உண்பது எப்போதும் நல்லது. உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், இரவு உணவிற்கு ஓட்ஸ் மற்றும் தினை வகைகளை உட்கொள்ளலாம். காய்கறி உப்மா, தவா பனீர், வறுத்த, வேகவைத்த, பச்சை காய்கறிகள், காய்கறி இட்லி, சியா விதை புட்டு மற்றும் காய்கறிகளுடன் ராகி மாவு ரொட்டி ஆகியவை நன்மை பயக்கும். மேலும் உணவு உட்கொண்ட உடனேயே தூங்கச் செல்வதைத் தவிர்க்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உருளைக்கிழங்கு தோலில் இத்தனை நன்மைகளா? உண்மை தெரிஞ்சா தூக்கிப்போட மாட்டீங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News