உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க 2 ரூபாய் இருந்தா போதும்

Tips To Reduce Cholesterol: கொலஸ்ட்ரால் நம் உடலில் பல செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. இதில் மொத்தம் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது - LDL கொழுப்பு மற்றும் HDL கொழுப்பு.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 24, 2023, 04:49 PM IST
  • பொதுவாக, எல்டிஎல் கொழுப்பின் சாதாரண வரம்பு ஒரு டெசிலிட்டருக்கு 125 முதல் 200 மில்லிகிராம் வரை இருக்கும்.
  • HDL கொழுப்புக்கான சாதாரண வரம்பு ஒரு டெசிலிட்டருக்கு 60 முதல் 80 மி.கி. ஆகும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க 2 ரூபாய் இருந்தா போதும் title=

கெட்ட கொழுப்பைக் குறைக்கும் குறிப்புகள்: கொலஸ்ட்ரால் என்பது உயிரணு மென்சவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள ஸ்டெராய்டு எனப்படும் ஒரு வகை கொழுப்புப் பொருள் ஆகும். செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை உருவாக்குவதற்கு இது அவசியம். இது ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பித்த சாறு ஆகியவற்றை உருவாக்குகிறது. HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கிளிசரைடுகள் உடலில் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் தமனிகளுக்குள் கொழுப்பை உருவாக்கலாம். எனவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் 2 ரூபாய் பொருள் எது, அவை எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

HDL (High-Density Lipoprotein): கொலஸ்ட்ராலின் தீய விளைவுகளிலிருந்து நம் உடலைப் பாதுகாப்பது நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். HDL கொழுப்பு பொதுவாக ஒரு டெசிலிட்டருக்கு 60 மி.கிக்கு மேல் இருக்க வேண்டும்.

LDL (Low Density Lipoprotein): இதுவே கெட்ட கொலஸ்ட்ரால், நம் உடலில் அதிகமாக இருக்கும்போது, ​​மோசமான விளைவுகளை ஏற்படுத்தி, உடலைத் இன்னல்களை செய்யத் தொடங்குகிறது. எல்டிஎல் கொழுப்பின் சாதாரண வரம்பு பொதுவாக ஒரு டெசிலிட்டருக்கு 100-129 மி.கி ஆகும்.

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கா? கல்லீரல் நோய்யாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அது உங்களுக்கு ஆபத்தாகலாம், ஏனென்றால் அது நமது தமனிகளில் குவிந்து, கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும். நமது கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாக இருந்தால், நமது உடல் மாற்ற அறிகுறிகள் மற்றும் பிற பிரச்சனைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறது.

சாதாரண கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
சாதாரண கொலஸ்ட்ரால் அளவுகள் ஒரு நபரின் வயது, பாலினம், எடை பொறுத்தது. பொதுவாக, எல்டிஎல் கொழுப்பின் சாதாரண வரம்பு ஒரு டெசிலிட்டருக்கு 125 முதல் 200 மில்லிகிராம் வரை இருக்கும். இருப்பினும், HDL கொழுப்புக்கான சாதாரண வரம்பு ஒரு டெசிலிட்டருக்கு 60 முதல் 80 மி.கி ஆக இருக்க வேண்டும்.

2 ரூபாயில் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்
ஹார்வர்ட் ஹெல்த் கருத்துப்படி, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க ஸ்டேடின் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தின் 10 மாத்திரைகள் ரூ.24க்குக் கிடைக்கின்றன, மேலும் ஒரு மாத்திரையின் விலை ரூ.2.5 ஆகும். இந்த மருந்துகள் படிப்படியாக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இருப்பினும், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முழங்கால் வலிக்கு நிவாரணம் கொடுக்கும் எலுமிச்சை டீ..! வீட்டு மருந்து மகத்துவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News