புதுடெல்லி: COVID-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்குப் பிறகு இந்தியா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாகத் தொடர்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் மொத்த கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. இருப்பினும், நாட்டில் இறப்பு விகிதம் இன்னும் உலகில் மிகக் குறைவான ஒன்றாக உள்ளது. இது இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதைக் கண்டு பலர் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அதற்கு ஒரு காரணம் கிடைத்திருக்கலாம் என்று தெரிகிறது.


மோசமான சுகாதாரம் இந்தியர்களை கடுமையான COVID-19 பாதிப்பிலிருந்து காத்ததா?


சமீபத்திய ஆய்வின்படி, மோசமான சுகாதாரம், சுத்தமான குடிநீர் பற்றாக்குறை மற்றும் நீண்ட காலமாக இந்தியர்கள் வாழ்ந்து வரும் சுகாதாரமற்ற நிலைமைகள் ஆகியவை கடுமையான COVID-19 நோய்த்தொற்றைப் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுத்திருக்கக்கூடும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் COVID-19 மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கக்கூடும் என்று கண்டுபிடிப்புகள் மேலும் குறிப்பிடுகின்றன.


ஏனெனில் அவர்கள் பிறந்ததிலிருந்தே நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளுக்கு அதிக அளவில் வெளிப்பட்டு விடுகிறார்கள். பிறப்பிலிருந்தே உயர் தர சுகாதாரம் இல்லாமல் பழகிவிட்டதால், அவர்களது உடலும் இப்படிப்பட்ட வைரஸ்களுக்கான எதிர்ப்பு சக்தியை எளிதாக வளர்த்துக்கொண்டு விடுகிறது.


இந்த ஆய்வு ஒரு ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டது. இது இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது. இது புனேவின் தேசிய செல் அறிவியல் மையம் மற்றும் சென்னை கணித நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஆய்வாகும். 106 நாடுகளின் பொது களத்தில் கிடைக்கும் தரவை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.


இந்த புள்ளிவிவரங்களை மக்கள் தொகை, அமைப்பு, சுகாதாரத்தின் தரம் உள்ளிட்ட 24 அளவுருக்களின் அடிப்படையில் ஒப்பிட்டனர். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​COVID-19 காரணமாக, அதிக வருவாய் உள்ள நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நாடுகளில் டைப் 1 நீரிழிவு நோய், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் அதிகமாக உள்ளன.


ALSO READ: Corona Virus கண்களில் உள்ள Cornea-வை பாதிக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது!!


122 நாடுகளின் தரவை பகுப்பாய்வு செய்த மற்றொரு சுயாதீன ஆய்வில், அதிக நுண்ணுயிர் வெளிப்பாடு சிக்கலான நோயெதிர்ப்பு சக்தி சங்கிலி மூலம் COVID-19 க்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவைத் தூண்டக்கூடும் என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை காங்க்ராவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.


எனினும் எந்தவொரு நோயையும் தடுப்பதற்கு அவர்கள் எந்த வகையிலும் மோசமான சுகாதாரத்தை ஊக்குவிப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தினர்.


குறைந்த இறப்பு விகிதத்திற்கான பிற காரணங்கள்


சில வல்லுநர்கள் நாட்டில் ஆரம்பகட்ட லாக்டௌன்கள் போடப்பட்டது மிக உதவியது என கருதுகின்றனர். இது COVID க்கு சரியான சிகிச்சையையும் பராமரிப்பையும் வழங்க உதவியது என்பது அவர்களது கருத்து. இது நாட்டில் COVID-19 காரணமாக ஏற்படும் மரணங்களின் அளவை குறைக்க உதவியுள்ளது.


உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் (India) ஒன்றாகும். வயதானவர்களுக்கு கடுமையான தொற்றுநோய்கள் மற்றும் COVID-19 காரணமாக இறப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதால், சில வல்லுநர்கள் நாட்டில், குறைந்த COVID-19 இறப்புகளுக்கு நாட்டின் மக்கள்தொகையும் அதில் உள்ள பல்வேறு வயது வரம்புகளும் காரணமாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.


ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR