சாப்பிட்டதும் வயிறு உப்புசமாவே இருக்கா; இந்த உணவுகளை தவிர்க்கவும்
ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால், பலருக்கு வயிற்று உப்புசம் பிரச்சனை, வாய்வு பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
தற்போதைய காலகட்டத்தின் தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், பலர் வயிற்றில் பிரச்சினைகள் மற்றும் வயிற்று உப்புசம், வாய்வு பிரச்சனை ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
ஒருவருக்கு வயிற்று உப்புசம் பிரச்சனை ஏற்படும் போது, வாயு உருவாவது, வயிற்று வலி, அமைதியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் சிறிது கவனம் செலுத்தினால், பிரச்சனையை விரைவாக சமாளிக்க முடியும். சில உணவுகள் வயிற்று உப்பிச பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. ப்ரோக்கோலி
உங்களுக்கு வயிற்று உப்புசம் பிரச்சனை இருந்தால், ப்ரோக்கோலியை உட்கொள்ள வேண்டாம். ப்ரோக்கோலியை ஜீரணிப்பதில் சிரமத்தை உணரலாம் என்பதால், இதன் காரணமாக வயிற்று உப்புச பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
2. ஆப்பிள்
வயிற்று உப்புசம் பிரச்சனை இருந்தால், உங்கள் உணவில் ஆப்பிளை சேர்க்க வேண்டாம். ஆப்பிள்கள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருப்பதால், இது வாயு பிரச்சனைகளை மட்டுமல்ல, வீக்கம் மற்றும் வலியையும் ஏற்படுத்தும். நார்ச்சத்து உடலுக்கு அவசியம் தான் என்றாலும், தினமும் உட்கொள்ளும் அளவு அதிகமாக இருந்தால் அது வயிறு உப்புசத்துக்கு வீக்கத்துக்கு வழிவகுக்கும்.
3. பூண்டு
பூண்டு வயிற்று உப்புசம் பிரச்சனையை அதிகரிக்கும். இதில் காணப்படும் ப்ராக்டான்கள் வயிற்று உப்பிச சிக்கலை மேலும் அதிகரிக்கும்.
4. பீன்ஸ்
பீன்ஸ் சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் பிரச்சனை அதிகரிக்கும். பீன்ஸிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது வயிற்றுப்போக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வயிற்று உப்புசம் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR