Fruits To Avoid During Kidney Stones: நமது உடல் ஆரோக்கியத்திற்கு பழங்களை உட்கொள்வது நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சிறுநீரக கல் இருப்பவர்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுடன், சில பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், ஆரோக்கிய குறைவு மட்டுமல்ல, வலியால் அவதிப்படும் நிலையும் ஏற்படும். சிறுநீரகம் மனித உடலின் வடிகட்டி என்று அழைக்கப்படுகிறது, இது உடலின் அழுக்கு மற்றும் திரவத்தை வடிகட்டுவதன் மூலம் நச்சுகளை நீக்கும் பணியைச் செய்கிறது சிறுநீரகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரகக் கல்


பல நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் சிறுநீரகத்தையே பாதிக்கும் தன்மைக் கொண்டது சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள். சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் கற்கள் உருவாகும். இந்த கற்களை, சிறுநீரகக்கற்கள் / சிறுநீரகக் கல் என்று  அழைக்கிறோம்.


மேலும் படிக்க | நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி


சிறுநீரகக் கல் அறிகுறிகள்


சிறுநீரகத்தில் கற்கள் உருவானால், சிறுநீர் தொற்று, வயிற்றுவலி என அறிகுறிகள் தெரியும். ஆரம்பக் கட்டத்திலேயே, இதை கவனிப்பது அவசியம். இல்லையெனில் நிலைமை மோசமாகி, தீவிரமான சூழ்நிலை உருவாகலாம்.


சிறுநீரக கல் ஏன் ஏற்படுகிறது?
பொதுவாக, ஆரோக்கியமற்ற உணவை உண்ணும்போதோ அல்லது அழுக்கு அல்லது தீங்கு விளைவிக்கும் திரவத்தை உட்கொள்ளும்போதோ, சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகிறது. அதேபோல, அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் கொண்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போது, சிறுநீரகக்கல் ஏற்படும்.


அதனால்தான் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், எந்தெந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.


மேலும் படிக்க | ஒல்லியாக இருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! இந்த 5 பிரச்சனைகள் பாதிக்கும்


சிறுநீரக நோயாளிகளுக்கு பழங்கள்
பொதுவாக, பழங்களை ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக நாம் கருதுகிறோம், அதுவும் பெரிய அளவில் உண்மைதான், ஆனால் ஒவ்வொரு பழமும் எல்லா நோய்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிறுநீரக கல் நோயாளிகளுக்கு பழங்கள் சாப்பிடுவதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.


சிறுநீரகக் கற்கள் இருந்தால் இந்த 5 பழங்களை சாப்பிடாதீர்கள்
சிறுநீரக கல் பிரச்சனை இருக்கும் போது, ​​சில பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் நீங்கள் அதை சாப்பிட்டால், கல் பிரச்சனை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். அந்த பழங்கள் எவை என்று தெரிந்துக் கொண்டு தவிர்த்தால், பிரச்சனை விரைவில் குணமாகும்.


1. மாதுளை
2. கொய்யா
3. உலர் பழங்கள்
4. ஸ்ட்ராபெரி
5. புளுபெர்ரி


மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ