திருமணமான ஆண்கள் தாங்கள் சாப்பிடும் உணவு குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதில் காட்டும் அலட்சியமும், கவனக்குறைவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், அது திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, தந்தையாகவேண்டும் என கனவு பொய்த்து போகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது என்பதால், கவனம் தேவை. 


 சில விஷயங்கள் அல்லது பழக்கவழக்கங்கள் பாலியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அவை விரைவில் கைவிடப்பட வில்லை எனில், அதன் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்..


விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் உணவுகள்


ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மோசமாகப் பாதிக்கக்கூடிய பல  உணவுகள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. திருமணமான ஒரு ஆண் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Men's Health: ஆண்கள் பூசணி விதிகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்


முழு கொழுப்பு பால் பொருட்கள்


பால் முழு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அதில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. சுகாதார நிபுணர்களும் இதை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர், ஆனால் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுவதால், ஆண்களின் விந்தணுவின் தரம் (Sperm Quality) மோசமடையக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில நேரங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க,விலங்குகளுக்கு ஸ்டெராய்டுகள் கொடுக்கப்படுகின்றன. இது விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, எனவே குறைந்த அளவு கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுங்கள்.


பதப்படுத்தப்பட்ட இறைச்சி


திருமணமான ஆண்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதைக் குறைக்கவும். இதை சாப்பிடுவதால் புரதம் கிடைக்கும் என்றாலும், அது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். அதோடு, இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்த வகை இறைச்சியை தினசரி உணவில் இருந்து நிச்சயம் விலக்க வேண்டும். மேலும், சந்தையில் கிடைக்கும் அசைவ உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை பெரும்பாலும் பதப்படுத்த இரைச்சியாக இருக்கலாம்.


மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்


புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்


இன்றைய இளைஞர்கள், பலர் சிகரெட் மற்றும் ஆல்கஹால் பிடியில் சிக்கியுள்ளனர்.  தொடர்ந்து சிகரெட் மற்றும் மது அருந்தினால், அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால், விந்தணு எண்ணிக்கை குறைந்து நீங்கள் தந்தையாகும் கனவு முழுமையடையாமல் போகும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR