யாரெல்லாம் பேரீச்சம்பழத்தை சாப்பிடக்கூடாது? மறந்தா பிரச்சனை பெரிசாயிடும்!
Dates Health Alert: குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடும்போது சிலருக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும். யாரெல்லாம் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது?
பேரிச்சம்பழம் பக்க விளைவுகள்: பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும், அதை யார் எப்போது, எப்படி எதனுடன் சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொருத்து உடலில் நன்மைகளோ அல்லது தீமைகளோ விளையலாம்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அதிகமாக பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு சிறந்தது என கருதப்படும் பேரீச்சம்பழம், கலோரி மற்றும் உடல் ஆரோக்கியம் பொறுத்து இவை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கேற்ப எத்தனை பேரீச்சம்பழம் வரை சாப்பிடலாம் என்பதை ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்து ஆலோசித்து உண்பது நல்லது. அதிலும், குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடும்போது சிலருக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும்.
பேரீச்சம்பழம் நன்மைகள்
பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் தீரும். கலோரிகள், வைட்டமின் பி6, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட பேரீச்சம்பழம், உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. பேரீச்சம்பழம் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளுடன் 200க்கும் வகைகளில் கிடைக்கின்றன.
யாரெல்லாம் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது? இந்த கேள்விக்கான விடை தெரிந்துவிட்டால், அமிர்தமே விஷமாக மாறி உடலை சீர்குலைக்காது.
யாரெல்லாம் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது?
சிறுநீரக நோயாளிகள்
மிகவும் ஆரோக்கியமான பேரீச்சம்பழம், சிறுநீரக நோயாளிகளுக்கு ஆரோக்கியமானவை அல்ல. பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும். எனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு பேரிச்சம்பழம் ஒரு சிறந்த உலர் பழம், ஆனால் இரத்த அழுத்த அளவு குறைவாக இருப்பவர்கள், பேரீச்சம்பழத்தை அதிகம் சாப்பிடாதீர்கள். அதிகமான பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது இரத்தச் அழுத்தக் குறைவின் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | புற்றுநோய் முதல் சரும பராமரிப்பு வரை... கொத்தமல்லி எண்ணெயின் மருத்துவ பண்புகள்
மலச்சிக்கல் அதிகரிக்கும்
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பேரிச்சம்பழம் ஆரோக்கியமானது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது மலத்தை மிகவும் கடினமாக்கும், இது மலச்சிக்கல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஒவ்வாமை பிரச்சினைகள்
பேரிச்சம்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சிலருக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்ட பிறகு அலர்ஜி ஏற்படுவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. இதனால் தோல் வெடிப்பு, தும்மல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவை ஏற்படும்.
உடல் பருமன்
பேரிச்சம்பழத்தில் நல்ல அளவு கலோரிகள் உள்ளன. பேரீச்சம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் உடல் பருமன் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே பேரீச்சம்பழத்தை குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க | கோவிட்-19 கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகிறது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ