சொதப்பிய பைக் ஸ்டண்ட், பறந்து விழுந்த இளைஞர்: திகிலூட்டும் வைரல் வீடியோ

Viral Video: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவிலும் திகிலூட்டும் வகையிலான ஒரு காட்சிதான் காணப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2023, 12:35 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் Original audio என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
சொதப்பிய பைக் ஸ்டண்ட், பறந்து விழுந்த இளைஞர்: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

நமது நெஞ்சை பதபதைக்க வைக்கும் பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். சில வீடியோக்கள் பாதியிலேயே நின்று விடும். அதன் பின் என்ன நடந்திருக்கும் என்ற பதற்றம் நம்மை பற்றிக்கொள்ளும். குறிப்பாக, சமீப நாட்களில் பைக் ரேசின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. இந்த ஸ்டண்டுகளை செய்பவர்கள் மிக கூலாக இவற்றை செய்தாலும், இதை பார்க்கும் நமக்கு அச்சமும், பீதியும்தான் அதிகரிக்கிறது.

ஆங்கிலத்தில் 'Speed ​​thrils but it kills' என்று ஒரு பழமொழி உண்டு, அதாவது வேகம் ஒரு தற்காலிகமாக உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் கொடுக்கலாம், ஆனால், அதில் ஏதாவது சிறு பிசகு ஏற்பட்டால் கூட அது உயிருக்கே ஆபத்தாகலாம். இதை எடுத்துக்காட்டும் மற்றொரு பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.  

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவிலும் திகிலூட்டும் வகையிலான ஒரு காட்சிதான் காணப்படுகின்றது. வீடியோவில் ஒரு இளைஞன் மிக வேகமாக பைக்கை ஓட்டுகிறார். அவர் சாதாரணமாக பைக்கை ஓட்டவில்லை மாறாக ஸ்டண்ட்மேன் போல் ஓட்டுகிறார். அந்த இளைஞன் பைக் ஸ்டண்ட் செய்யும் விதத்தை பார்த்த பிற வாகன ஓட்டிகள் பீதியுடன் பார்த்துக்கொண்டே சாலையை கடக்கிறார்கள். அப்போதுதான் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது. 

அதிவேகத்தில் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் போது சாலையில் விழுந்த இளைஞன் 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு இளைஞன் பைக்கை வேகமாக ஓட்டிச் செல்வதை காண முடிகின்றது. சாதாரணமாக அனைவரும் பைக்கின் மீது அமர்ந்து பைக்கை ஓட்டுவார்கள். ஆனால், இவர் பைக்கின் மீது நின்றுகொண்டு ஓட்டுவதை நாம் காண்கிறோம். அதிவேகமாக ஓட்டுவது மட்டுமல்லாமல் அவர் பைக்கை அங்கும் இங்குமாக வளைத்து வளைத்தும் ஓட்டுகிறார். அவரது இரு கால்களும் பைக்கின் பெடல்களில் இருக்காமல் பைக்கின் இருக்கையில் இருக்கின்றன, அவருடைய பைக்கும் பயங்கர வேகத்துடன் பயணிக்கிறது.

மேலும் படிக்க | எருமை மீது அருமையாக சவாரி செய்த இளைஞர்! ஏன் தெரியுமா? வைரல் வீடியோவை பாருங்கள்!

ஆனால் அப்போதுதான் யாரும் எதிர்பாராத ஒன்று நடக்கிறது. ஆனால் இதை எதிர்பாராதது என கூற முடியாது. அந்த இளைஞர் பைக் ஓட்டும் விதத்தை பார்த்த அனைவரும் இதை எதிர்பார்த்திருப்பார்கள். அதோடு அந்த அச்சத்திலும் இருந்திருப்பார்கள். சில நொடிகளில் பைக் பேலன்ஸ் இழந்து ஒரு இடத்தில் விழுந்தது, இளைஞன் ஒரு இடத்தில் விழுந்தார். வேகமாக ஓடிய பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் கண்டிப்பாக அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், நல்ல வேளையாக பெரிதாக எதுவும் ஏற்படவில்லை. அவரும் தனது வலியை வெளிக்காட்டவில்லை. எழுந்து ஓடி வந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.

நெஞ்சை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்

விடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் Original audio என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 'எத்தனை பேரை தண்டித்தாலும் இப்படிப்பட்டவர்கள் பாடம் கற்க மாட்டார்கள்' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 'இவர்களுக்கெல்லாம் உயிர் மீது ஆசை இருக்காதா' என மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | உலகின் மிக உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் சந்தித்தால்... வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News