முள்ளங்கியை சாப்பிடுவது நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை. இல்லை என்றால், அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.  குளிர்காலத்தில் முள்ளங்கி ஒரு மாமருந்து எனலாம். ஏனெனில் இதில் பல வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரக்கூடியது. பொதுவாக இதை சாலட் போன்றே சாப்பிடுவார்கள். சிலர் இதனை சமைத்து சாப்பிட விரும்புகிறார்கள். முள்ளங்கியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சில பிரச்சனைகள் இருந்தால், இதனை தவிர்க்க வேண்டும். அதிலும்,  குறிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. இந்த காய்கறி யாருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முள்ளங்கியை இரவில் சாப்பிடுவது இவர்களுக்கு தொல்லை தரும்


1. வாயு பிரச்சனை உள்ளவர்கள்


உங்கள் வயிற்றில் அதிக வாயு உற்பத்தியாகிவிட்டால், இரவில் முள்ளங்கியை தவறுதலாக கூட உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வதால் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கும் மற்றும் இரைப்பை அழற்சி காரணமாக தூக்கம் வருவதும் கடினம்.


மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்! 


2. உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் வலி ஏற்படும் போது


உங்கள் கை, கால், இடுப்பு, முழங்கால், தோள்பட்டை அல்லது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டால், இரவில் தவறுதலாகக் கூட முள்ளங்கியை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் முள்ளங்கியை சாப்பிடுவதால் உடலில் வாயு உருவாகி வலியை அதிகரிக்கும்.


3. வீக்கத்தால்  சிரமப்படுபவர்கள்


இரவில் முள்ளங்கி சாப்பிடுவது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும், குறிப்பாக உங்களுக்கு வாய்வு அல்லது புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், முள்ளங்கியைத் தவிர்ப்பது நல்லது. மதிய உணவில் முள்ளங்கி சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை என்றாலும், இரவில் நிச்சயம் சாப்பிடக் கூடாது.


4. மூட்டுவலி நோயாளிகள்


வயது அதிகரிக்கும் போது, ​​மூட்டுவலி பிரச்சனையும் அதிகரிக்கிறது. இதனால் சிரமப்படுபவர்கள் இரவில் முள்ளங்கி சாப்பிடக்கூடாது,. இல்லையெனில் வலி அதிகரிக்கும்.  எச்சரிக்கையுடன் இருந்தால் மூட்டு வலி கட்டுக்குள் இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ