கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த தருணம் அவள் தாயாக மாறுவது தான். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2022, 05:37 PM IST
  • சால்மோனெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.
  • ஆரோக்கியமான சாலட் தேர்வுகளில் முளை கட்டிய தானியங்கள் அனைவரின் விருப்ப உணவாக இருக்கும்.
  • குழந்தையின் மூளை வளர்ச்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்! title=

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த தருணம் அவள் தாயாக மாறுவதுதான். எனவே, என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் உங்களுக்கு பல குறிப்புகளை வழங்குகிறார்கள், எனவே நாங்கள் உங்களுக்கு ஒத்த சில உணவுகளைக் கொண்டு வந்துள்ளோம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் இதை உட்கொள்ளக்கூடாது.

சமைக்காத முட்டைகள்

பச்சை முட்டைகள் அல்லது சமைக்காத முட்டைகள் சால்மோனெல்லா பாக்டீரியாவால் மாசுபடலாம். சால்மோனெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். இருப்பினும், அரிதான சந்தர்ப்பங்களில், தொற்று காரணமாக கருப்பையில் பிடிப்புகள் ஏற்படலாம். மேலும், குறை பிரசவத்திற்கும் வழிவகுக்கும்.

சமைக்காத முளை கட்டிய தானியங்கள்

ஆரோக்கியமான சாலட் தேர்வுகளில் முளை கட்டிய தானியங்கள் அனைவரின் விருப்ப உணவாக இருக்கும் ஆனால், சமைக்காத முளைக்கட்டிய பயறுகளிலும் சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கலாம். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது. முளைக்கத் தொடங்க விதைகளுக்குத் தேவைப்படும் ஈரப்பதமான சூழல் இந்த வகையான பாக்டீரியா வளர மிகவும் ஏற்ற சூழல் எனலாம். இந்த காரணத்திற்காக, நீங்கள் முளை கட்டிய பயறு தானியங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. எனினும் இவற்றை சமைத்த பிறகு சாப்பிடுவது பாதுகாப்பானது.

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி 

மெர்குரி மீன்

கர்ப்ப காலத்தில் பெண்கள் மெர்குரி மீனை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மெர்குரி மீன் ஒரு பெண்ணின் நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கலாம். இதனால், கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். 

ஆல்கஹால்

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மது அருந்தக்கூடாது. ஆல்கஹால் குழந்தையின் மூளை வளர்ச்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.

இறைச்சி

கர்ப்ப காலத்தில் பெண்கள் இறைச்சியை அதிகமாக உட்கொள்வது அவர்கள் உடல் நலத்தை பாதிக்கும்.

தேநீர் மற்றும் காபி

தேநீர், காபி மற்றும் பல பானங்களில் காஃபின் காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்கள் அதிகமாக டீ அல்லது காபி அல்லது காஃபின் எடுத்துக் கொள்வது தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கும்.

மேலும் படிக்க | கல்லீரலை பாதித்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் கலப்பட டீ! கண்டுபிடிப்பது எப்படி!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News