தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, மாரடைப்பு என்பது பலரது வாழ்க்கையை நிலை குலைய செய்து விடுகிறது. இதனால் பெரும்பாலானோர் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். அதுவும் தற்போதைய மோசமான உணவு பழக்கத்தினால், வயதானவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம். மாரடைப்புக்கு முந்தைய அறிகுறிகளை அலட்சியம் செய்து விடுகிறார்கள். நமக்கு, அதெல்லாம் வராது என்ற அதீத நம்பிக்கை அல்லது உடல் நலன் குறித்து அக்கறை காட்டாத தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணம். 


மாரடைப்புக்கு முன் தோறும் சில அறிகுறிகளை பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதனால் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க முடியும். 


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!


இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. நீண்ட நேரம் இரத்த ஓட்டம் தடைபடும் போது, ​​இதய தசை சேதமடையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


மாரடைப்புக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகள்:


1. மாரடைப்புக்கு முன் மார்பில் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, சிறிதும் தாமதமின்றி, நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.


2. சிலருக்கு மயக்கமாகவும், மிகவும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


3. எந்த காரணமும் இல்லாமல் மிகவும் சோர்வாக இருத்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை மாரடைப்புக்கு முன் ஏற்படும் அறிகுறிகளாக இருக்கலாம். 


4. அதிக அளவு வியர்த்தல், கை, முதுகு, தாடை மற்றும் வயிற்றிலும் வலி அல்லது அசெளகரியம் ஆகியவையும் மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும். மாரடைப்பு வலி உடலின் இடது பக்கமாக ஏற்படும் என்றும், நெஞ்சில் ஏற்படும் வலி அப்படியே கைகளுக்கு பரவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ