முதுகுவலியைப் போக்க சில டிப்ஸ்: பெரும்பாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. முதுகு வலியை போக்க உடற்பபிற்சிகள் மிகவும் அவசியம் என்றாலும், டயட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சிலவற்றைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
முதுகு வலிக்கு, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதுடன், வேறு பல காரணங்களும் உள்ளது என்பதையும் மறுக்க இயலாது. இந்த வலி அதிகரிக்கும் போது, அது நம் அன்றாட வேலையை பாதிக்கிறது. அதே சமயம் பலர் முதுகுவலி ஏற்படும் போது பல மருந்துகளை உட்கொள்கின்றனர்.
மருந்தினால் வலி ஓரளவு குறையும். ஆனால் பக்கவிளைவுகளும் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே, முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெற உணவில் என்ன என்னவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்
காய்கறிகள்
நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தால், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அவற்றில் காணப்படுகின்றன. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் . இது தவிர கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
பழங்கள்
பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சாறு நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். ஆப்பிள், அன்னாசி, செர்ரி, திராட்சை, ஆரஞ்சு போன்றவை நிவாரணம் அளிக்கும்.
மஞ்சள் பால்
பாலில் மஞ்சளை கலந்து குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மஞ்சள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது முதுகு வலியிலிருந்து நிவாரணம் தரும். மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. எனவே, நீண்ட நாட்களாக முதுகுவலியால் தொந்தரவு இருந்தால், நீங்கள் மஞ்சள் பால் குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR