Fruits to be avoided after taking Meal: பெரும்பாலும் நம்மில் பலருக்கு சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடும் பழக்கம் உள்ளது. அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டாக இருந்தாலும் சரி, உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவது வழக்கம் உள்ளது. ஆனால் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத சில பழங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பழங்களை நீங்கள் சாப்பிட்டால், அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழங்கள் சாப்பிட சரியான நேரம் காலை என்று உணவு நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆயுர்வேதமும் அதையே சொல்கிறது. சிட்ரஸ் பழங்கள் தவிர மற்ற பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. 


உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தவரை, ஆயுர்வேதம் அதை சரியான பழக்கமாக கருதுவதில்லை. இது  செரிமான அமைப்பையும் பாதிக்கிறது என ஆயுர்வேதம் கூறுகிறது. இருப்பினும், சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடக் கூடாது என நவீன அறிவியல் எங்கும் சொல்லவில்லை. 


ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்


சாப்பிட்ட பிறகு சாப்பிடக் கூடாத சில பழங்களை அறிந்து கொள்ளலாம்


மாம்பழம்: இதை சாப்பிட்ட பிறகு  உட்கொள்ளக்கூடாது. இதில் நிறைய சர்க்கரை உள்ளது.  இது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளவே கூடாது. மேலும் இது உடலில் சூட்டை ஏற்படுத்தும் என்பதால், சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிடலாம் என அறிவுறுத்தப்படுகிறது.


வாழைப்பழம் உடலில் கலோரி மற்றும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.


தர்பூசணி சாப்பிட மதியம் சரியான நேரம். இரவு உணவிற்குப் பிறகு அதை உட்கொள்ளக்கூடாது.


திராட்சை உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. திராட்சை சாப்பிடும் போது, சாப்பிட்ட ஒரு மணி நேரம் பின்னோ அல்லது முன்னோ எடுத்துக் கொள்ள வேண்டும்.


ALSO READ | Health Tips: ‘இந்த’ உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது; ஏன் தெரியுமா..!!


சாத்துக்குடி பழத்தில், குளுக்கோஸ் உள்ளது, இது ஆற்றலை அளிக்கிறது. பிற்பகலில் அதை உட்கொள்ள வேண்டும். இது நீரிழப்பு பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. வெயிலில் செல்வதற்கு முன்பு சாத்துகுடி எடுத்துக் கொள்வது நல்ல பலன கிடைக்கும்.


ஆரஞ்சு: வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சுகளை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் அல்லது உணவுக்கு 1 மணி நேரத்திற்குப் பிறகு உட்கொள்ளுங்கள்.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR