தினமும் பால் குடித்தால் இதயத்திற்கு நல்லதா..? மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!
தினமும் பால் குடித்தால் இதயத்திற்கு நல்லது என சில ஆரோக்கிய பிரியர்கள் மத்தியில் ஒரு கூற்று நிலவுகிறது. இது உண்மையா..? மருத்துவர்கள் கூறுவது என்ன..?
நம் உடலில் உள்ள தசை மற்றும் எலும்பு வலு பெற தினமும் பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. நல்ல டயட் உணவுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள ஒரு உணவு வகை பால் மற்றும் அது சார்ந்த உணவுகள். தினமும் பால் குடிப்பதனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்றும் வைட்டமின் டி, ஏ போன்ற சத்துகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது இதயத்திற்கும் நல்லது என ஒரு சில ஆரோக்கிய பிரியர்கள் கருதுகின்றனர்.
இதய ஆரோக்கியத்திற்கு பால் நல்லதா..?
பால் மற்றும் அது சம்பந்தப்பட்ட உணவுகளில் அதிக கொழுப்பு கலந்திருப்பதாகவும் அதை குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்றும் சிலர் கருதுகின்றனர். இது குறித்து தெளிவாக எடுத்துரைக்கும் மருத்துவர்கள், பாலை அளவுடன் குடித்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர். பால் அருந்துவதனால் இதய நோய்களான நெஞ்சு வலி, மாரடைப்பு, ரத்த குழாயில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்கலாம் என்கின்றனர். பால் குடிப்பதனால் ஏற்படும் பிற நன்மைகளையும் பார்க்கலாமா..?
மேலும் படிக்க | ருசியா சாப்பிடணும்... எடையும் குறையணுமா? அதுக்கு வழி இந்த பருப்புல இருக்கு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
தினமும் பால் அருந்துவதால் உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் மண்டலம் வலு பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருக்கும் வைட்டமின் டி, வைட்டமின் ஏ போன்றவற்றிற்கு பால் சக்தி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாலில் புரத சத்துகள் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
பல் மற்றும் எலும்பு சச்க்திக்கு உதவுகிறது:
எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தையும் பால் அருந்துவது மேம்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்துகளை உருவாக்கவும் பால் உதவுகிறது. தினமும் பால் சம்பந்தப்பட்ட உணவுகளான தயிர், சீஸ் போன்றவர்றை எடுத்துக்கொள்வதால் நம் உடலில் கால்சிய சத்துகள் அதிகரிக்குமாம்.
செரிமான கோளாறினை சரி செய்யும்:
செரிமானத்தை உண்டாக்கும் வைட்டமின் டி-யினை அதிகரிக்கிறது. தினமும் பால் குடிப்பதனால் நம் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிக்குமாம். இதனால் செரிமான கோளாறுகளை தவிர்க்கலாம் என்கின்றனர், மருத்துவர்கள்.
சரும அழகை பாதுகாக்கும்:
சரும அழகை பாதுகாப்பதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஒரு டம்ளர் பால் குடித்தால் உங்கள் உடலில் புரதச்சத்துகள் அதிகரிக்கும். வைட்டமின் ஏ உருவாகுவதால் உங்கள் முகம் பொலிவு பெறும். பலரது ஸ்கின் கேர் அழகு ரொட்டீன்களில் பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனநலத்திற்கும் நல்லது:
நம் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஹார்மோன்களை தூண்டுவதற்கு தினமும் பால் குடிக்க வேண்டுமாம். இதனால், நம் மனதும் உடலும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இது நம் மன நிலையையும் உணர்ச்சிகளையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுமாம்.
நீர்சத்து குறைப்பாட்டினை தவிர்க்கும்:
உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் நோய் பிரச்சனைகளை தினமும் பால் குடிப்பதனால் தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகிய சத்துக்கள் இதில் நிறைந்திருப்பதால் நீரிழிவு நோய்களையும் தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ