ருசியா சாப்பிடணும்... எடையும் குறையணுமா? அதுக்கு வழி இந்த பருப்புல இருக்கு

Pulses For Weight Loss:  நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட சில ருசியான உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 29, 2023, 03:14 PM IST
  • பாசிப்பயறை பல வழிகளில் நாம் நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பல ருசியான வழிகளில் இதை சமைத்து நம் அன்றாட உணவில் பயன்படுத்தலாம்.
  • அந்த வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ருசியா சாப்பிடணும்... எடையும் குறையணுமா? அதுக்கு வழி இந்த பருப்புல இருக்கு title=

எடை இழப்புக்கான குறிப்புகள்: நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை குறைப்பதால் உடல் எடை குறையாது, மாறாக நமது உடலின் ஆற்றலில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட சில ருசியான உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க பயத்தம் பருப்பு: 

ஜிம்மில் பல மணி நேரம் வியர்த்து உடற்பயிர்சிகளை செய்தும் உடல் எடை குறையவில்லை என்றால், உணவில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உணவில் அதிக அளவில் பாசிப்பயறை சேர்த்துக்கொள்வது இதற்கு நன்மை பயக்கும். இந்த பருப்பு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின், மெக்னீசியம் மற்றும் இன்னும் பல சத்துக்கள் உள்ளன. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இதன் மூலம் இது எடை இழப்புக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்ட பிறகு, நீங்கள் நீண்ட நேரம் திருப்தியான உணர்வு இருப்பதால், அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்க உதவும். 

பாசிப்பயறை பல வழிகளில் நாம் நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பல ருசியான வழிகளில் இதை சமைத்து நம் அன்றாட உணவில் பயன்படுத்தலாம். அந்த வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பயத்தம் பருப்பு சில்லா: 

பயத்தம் பருப்பை சில்லா செய்து சாப்பிடலாம். இது ஒரு மிகவும் பிரபலமான வட இந்திய உணவு வகையாகும். இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதற்கு பயத்தம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து வைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, இந்த பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். இப்போது அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, சாட் மசாலா சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கினால், ஒரு நல்ல மாவு தயாராகும். இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைக்கவும். கல்லில் சிறிது மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு நன்றாக வேக வைக்கவும். பயத்தம் பருப்பு சில்லாவை தினமும் காலை உணவாக சாப்பிடலாம்.

மேலும் படிக்க | நோயில்லா வாழ்வுக்கு இந்த ‘4’ பொருட்களை உணவில் சேர்த்துக்கோங்க! ஆரோக்கியமா வாழலாம்

முளைகட்டிய பயறு:

உடல் எடையை குறைக்க முளைகட்டிய பயறையும் உட்கொள்ளலாம். அதை செய்ய அதிக முயற்சி தேவையில்லை. இதற்கு பச்சை பயறை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுத்த நாள் சுத்தமான தண்ணீரில் இதை நன்றாக சுத்தம் செய்யவும். வேண்டுமானால் பயறை அப்படியே சாட் செய்தும் உட்கொள்ளலாம். ஆனால் நீங்கள் அதை முளைக்க விரும்பினால், அதை ஒரு துணியில் கட்டி 2 நாட்கள் வைத்திருக்கவும். இப்போது ஒரு கிண்ணத்தில் முளைத்த பயறை எடுத்துக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, சாட் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை கொத்தமல்லியை மேலே சேர்த்து இதை உட்கொள்ளலாம். போட்டு தினமும் சாப்பிடவும். இது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும், மேலும்  அதிக பசியும் ஏற்படாது.

பயறு சூப்:

உடல் எடையை பராமரிக்க பயறு சூப் சாப்பிடலாம். இதை செய்வதும் மிக எளிது. இதற்கு பூண்டு, இஞ்சி, உப்பு, சீரகம், பெருங்காயம் மற்றும் மசாலாவை ஊறவைத்த பயறை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அதில் சிறிது பொடி செய்த கருப்பு மிளகை போட்டு சாப்பிடவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் படிக்க | பாகற்காய் கசப்பில் இருக்கும் அதலைக்காய் கல்லீரல் பாதிப்பை குறைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News