Bone Health For Vegetarians: எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமைக்கு, மீன் மற்றும் இறைச்சி தான் வேண்டுமா? எளிமையான விலை குறைவான பலவகையான சைவ உணவுகள் இருக்கிறதே!
இரும்பு போன்ற வலுவான எலும்புகளைக் கொடுக்கும் இந்த சைவ உணவுகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சைவ உணவில் கொட்டிக் கிடக்கு என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
உடலுக்கு எல்லாவிதத்திலும் சிறந்தது பாதாம், அதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம், பாலில் கலந்து பாதாம் பாலாகவும் குடிக்கலாம், அப்படியே வேர்க்கடலைப் போலவும் உண்ணலாம், இல்லையென்றால், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடலாம்
முழு தானியங்கள் நீங்கள் பால் பொருட்களை உட்கொள்ள விரும்பவில்லை என்றால், முழு தானியங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம், உங்கள் உடலுக்கு ஏராளமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்கிறது, இது எலும்பு வலிமையை ஊக்குவிக்கும்.
பல வகையான பீன்ஸ்கள் உங்கள் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் பீன்ஸில் காணப்படுகின்றன, இவை எலும்பு உருவாவதை ஊக்குவிக்கும்.
கொட்டைகளில் ஓரளவு கால்சியம் மட்டுமே உள்ளது, ஆனால் அவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடலுக்கு வழங்குகிறது. மெக்னீசியம் உங்கள் எலும்புகளில் கால்சியத்தை உறிஞ்சி தக்கவைக்க உதவுகிறது. அதேசமயம், பாஸ்பரஸ் எலும்புகளின் முக்கிய அங்கமாகும். வலுவான எலும்புகளுக்கு தினமும் 1 கைப்பிடி அளவு உலர் பழஙக்ளை சாப்பிடுங்கள்.
நார்ச்சத்துடன், விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன, இது கொழுப்பைக் குறைக்கும் ஒரு வகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமாகும். மேலும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். இதுமட்டுமின்றி, விதைகளை உட்கொள்வதால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியும் மேம்படும். உங்களுக்கு வலுவான எலும்புகள் வேண்டுமானால், பூசணி விதைகள், சியா விதைகள், சுரைக்காய் விதைகள் போன்றவற்றை சாப்பிடுங்கள்
பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலை பச்சை காய்கறிகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அவற்றில் நிறைந்துள்ளன. உடலுக்குத் தேவையான வைட்டமின் கே மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இவை எலும்புகளை ஊக்குவிக்கும்.
நீங்கள் வலுவான எலும்புகளை விரும்பினால், உங்கள் உணவில் கொழுப்பு இல்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பால், தயிர் மற்றும் பனீர் போன்ற பால் பொருட்கள் எப்போதும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். இந்த உணவுகளில் கால்சியம் அதிகமாக உள்ளது, இது எலும்புகளின் வலிமை மற்றும் கட்டமைப்பிற்கு பங்களிக்கும்.